பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/495

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேலை தேடும் படலம் 463 என்மனம்' எண்ணியது பொய் என்பது என் வாழ்க்கையி லேயே தெளிவாயிற்று. “அயோக்கியர்கள், ஏமாற்றுபவர் கள் படிக்காதவர்களிடமும் உள்ளனர்; படித்தவர்களிடமும் உள்ளனர்" என்ற உண்மையை நாளடைவில் உணர்ந்தேன். இன்றும் அந்த உண்மை மாறாமல் உள்ளது என்பதையும் காண்கின்றேன். கல்லூரியில் சேரும் நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. நோயில் கிடக்கும் என் மனைவியைப் பிரிந்து செல்ல நேர் கின்றதே என்று என் மனம் மிகவும் வேதனையுற்றது, இந்த நிலையிலும் அவள் துணிவுடன் போய்வாருங்கள்! இறை வன் இருவருக்கும் துணை நிற்பான்” என்று இசைவு தெரிவித் தாள் . இரண்டு நாள் முன்னதாக “புதன் சந்தைவரை' (இது நாமக்கல்-சேலம் நெடுஞ்சாலையருகில் உள்ளது) பெட்டி ப டு க் க க யு டன் மாட்டுவண்டியில் அனுப்பினார்கள். அங்கிருந்து மேருந்தில் ஏறி சேலம் வந்தேன்; அன்றிரவே இருப்பூர்தி மூலம் (Train) சென்னை வந்தடைந்தேன்; மத்திய நிலையத்தில் (Central station) இறங்கி மின்விசையால் இயங்கும் இருப்பூர் தியில் பூங்கா நிலையத்தில் (Park Station) ஏறிச் சைதையை அடைந்தேன். விண்ணப்பத்திலேயே மாணவர் விடுதியில் இடம் வேண்டும் என்று குறிப்பிட் டிருந்தமையால் நேராக மாணவர் விடுதியில் வந்து சேர்ந் தேன். A-3 என்ற தனியறை ஒதுக்கப் பெற்றிருந்தது. அதில் செள கர்யமாகத் தங்கினேன். மேசை நாற்காலி தரப் பெற்றிருந்தன, கட்டில் இல்லை; அக்காலத்தில் இந்த விடுதியில் கட்டில் வசதி இல்லா திருந்தது. ஒன்றிரண்டு நாட் களில் இரண்டு ரூபாயில் ஒரு நார்க்கயிறு கட்டில் வாங்கிக் கொண்டேன். ஓராண்டிற்கு இது தாங்கும். உணவு விடுதி அமைந்திருந்த சூழ்நிலை ஓர் ஆசிரமத்தின் சூழ்நிலையை ஒத்திருந்தது. அறை வாடகை மாதம் மூன்று ரூபாய்தான்! -30-