பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/494

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

464 நினைவுக் குமிழிகள்-1 ரூ200/- உடன் கோட்டாத்தூர் வந்தேன், என் அன்னை யுடன் இரண்டு நாட்கள் தங்கிவிட்டு என் மாமனார் வீட்டிற்கு வந்து பத்து நாட்கள் தங்கியிருந்தேன். நோயுற்ற என் மனைவியைப் பிரிந்து செல்வது மிகவும் கஷ்டமாகத் தான் இருந்தது. அகப்பொருள் இலக்கியத்தில் கூறப் பெற்றுள்ள "ஓதற் பிரிவை நினைத்து கொள்ளுகின்றேன், பட்டப் படிப்பிறகு இரண்டாண்டு பிரிந்திருந்தேன் ; இப் போது ஓராண்டு ஆசிரியர் பயிற்சிக்காகப் பிரிகின்றேன்” என்று நினைத்துக் கொண்டேன். அப்பொழுது என் மாமனார் வீட்டிலுள்ள அனைவருமே “அரக்க மனம் படைத்தவர்கள் என்பதை நன்றாகப் புரிந்து கொண்டேன். “இந்த மரபில் மலர் போன்ற மென்மையான உள்ளத்தை யுடைய என் மனைவி பிறந்தாளே! என்று என் உள்ளம் உருகியது; கழிவிரக்கம் கொண்டது. “இந்தக் குடும்பம் எதிர் காலத்தில் எங்கட்கு என் னென்ன துன்பங்களைக் கொடுக்க இருக்கின்றதோ?" என்றெல்லாம் என் மனம் சிந்திக்கத் தொடங்கியது. அப்போது “எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி எண்ணி ஏழைநெஞ்சம் புண்ணாகச் செய்ததினிப் போதும் பராபரமே!? ? என்ற தாயுமான அடிகளின் திருவாக்கை என் மனம் அசை போடத் தொடங்கியது . நான் எண்ணிய எண் ணங் களெல்லாம், பின்னர் நடைமுறைப் படுத்தப்பெற்றதை ஒரு மூன்றாண்டு களில் கண்டேன். இதைப் பின்னர் வரும் குமிழி யொன்றில் இந்த நூலின் இரண்டாம் பகுதியில், விளக்குவேன். நாட்டுப்புற மக்கள் அனைவருமே, கள்ளங்கபடமற்றவர் கள் என்பதை 'உண்மையிலேயே கள்ளங்கபடமற்ற 29. தா. பா. பராபரக் கண் ணி-35