பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/493

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பணம் தேடும் படலம் 463 கிருஷ்ணசாமி ரெட்டியார் இதில ஏதோ சூது இருப்பதாகத் தெரிகின்றது என்று காதோடு காதாகத் தெரிவித்தார். இவர் பேச்சு என் மனத்தில் ஏறவில்லை எப்படியோ முடித்து விடுங்கள் என்று சொல்லி விட்டேன். கிருஷ்ணசாமி ரெட்டியார் இதை விரும்பவில்லை . “ரூ 1500/- பெறுமான நிலத்தை ரூ 700-க்குக் கேட்கிறார்களே, பாவிகள் ஒரு கல்லூரி மாணவனை அவன் அவசரத்தை அது சரித்து ஏமாற்றப் பார்க்கின்றார்களே! ரூ1000/- க காவது வைத்துக் கொள்ளக் கூடாதா? என்று மனம் குமுறிப் பேசினார் அன்றிரவு தனிமையில், என்ன செய்வது? அந்த நிலத்தை ஈடாக எழுதிக் கொண்டு பணம் தரவும் ஒருவர் இல்லை, மறு நாள் காலையில் இராமசாமி ரெட்டியார் என்னிடம் வந்தார், ரூ700/- ஐயும் எடுத்துக்கொண்டு சென்னை செல்லுகின்றாயா? ஒரே சமயத்தில் இந்தத் தொகை தேவையா? என்று கேட்டார். நான், "முதலில் ரூ200 - இருந்தால் போதும்; பிறகு மாதாமாதம், ரூ100/- அனுப் பினால் போதும் என்றேன். கிருஷ்ணசாமிரெட்டியாருக்கு மனம் கொதித்தது இதனைக் கேட்டு; உள்ளம் குமுறியது. அடுத்த நாளே உப்பலியபுரம் சென்று கிறயபத்திரம் எழுதிப் பதிவு செய்து விட்டேன். ரூ200/- பெற்றுக் கொண்டு “ஏதோ வெற்றி பெற்றுவிட்டதாக ஊர் திரும்பும்போது கிருஷ்ண சாமிரெட்டியார் நன்றா க ஏமாந்தாய்; என்னாலும் உதவ முடியவில்லை; என்ன செய்வது? நீ சென்னை சென்றதும், ஒரு மாதத்தில் 'மீதி ரூ 500/-ம் உடனே தேவை' என்று கடிதம் எழுது. இவர்கள் மாதாமாதம் சரியாக அனுப்ப மாட்டார்கள், பிறர்கஷ்டத்தைத் துளியும் அறியாதவர்கள். சுயநலமே, வடிவெடுத்தாற் போன்றவர்கள்” என்று சொல்லி விடைகொடுத்தார். இருவரும் நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும் எப்பொழுது சென்றாலும், கிருஷ்ணசாமி ரெட்டி யார்வீட்டில் தான் உண்பேன்; உறங்குவேன், இராமசாமி ரெட்டியார் வீட்டில் ஒரு வேளை கை நனைப்பேன்.