பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/492

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

462 நினைவுக் குமிழி கள்-1 சென்று என் அண்ணார் (என் மனைவிக்கு சொந்த அத்தை மகன்) மு. கிருட்டிணசாமி ரெட்டியார் இல்லத்தில் ஒரு வாரம் தங்கி முயன்றேன். இவரும் மற்றோர் அண்ணார் பெ. இராமசாமி ரெட்டியார் என்பவரும் வாங்கு வோரைப் பிடிக்க முயன்றனர். கிருஷ்ணசாமி ரெட்டியார் அதிகமாக நடக்க முடியாதவர்; அலையமுடிவதில்லை . பெ. இராமசாமி ரெட்டியார் தான் அலைந்து திரிந்து முயன்றவர். இவர்கள் இருவருமே அன்றைய நிலவரப்படி ரூ1500/-க்குப் போகும் என்று சொன்னவர்கள். நான் கல்லூரிமாணவன்; உலக நிலைமையும், உலகோர் அநுபவமும் அறியாதவன், கல்வி அறிவில்லாத நாட்டுப் புறத்தார்களிடம் கூட எளிதில் ஏமாற்றப் படுவதற்குப் பக்குவமானவன். ஆலத்துடையாம் பட்டியில் இவர்களைத் தவிர, வேறு எவரையும் நன்கு அறியாத நிலையில் இருந்தேன். அந்தக் காலத்தில் சிவசங்கரரெட்டியார், முனிசீப்பு பெத்து ரெட்டி யார் (இவர்கள் 194 1க்குப் பிறகுதான் நன்கு அறிமுகமாகி நெருங்கிப் பழகியவர் கள்) அந்த ஊரில் செல்வாக்குடன் திகழ்ந்தவர்கள். இவர்களை நாடுவதற்குத் துணிவும், இல்லை; எண்ணமும் எழவில்லை . நான்கு நாட்களாகக் காத்திருந்தும் பலன்கிட்டவில்லை . ஆனால் படிப்பிற்கு என் அவசரத்தேவை ரூ750/= என்பதை இவர்கள் நன்கு அறிந்து கொண்டனர். நாள் ஆக ஆக என் கவலையும் அதிகரித்ததை என் முகத்திலிருந்தும் என் பேச்சிலிருந்தும் அறிந்து கொண்டிருந்தனர். இரவில் கூட நன்றாக உறங்காத நிலை ஏற்பட்டதையும் கண்டனர். ஒரு நாள் பெ, இராமசாமி ரெட்டியார் என்னிடம் வந்து

  • எங்கும் வாங்குவோர் இருப்பதாகத் தெரியவில்லை;

கடைசியில் என் மாமியார் வைத்துக் கொள்வதாகத் தெரிவித்தார். ஆனால் ரூ-700/-க்கு மேல் விலை தரவிரும்ப வில்லை . விருப்பப்பட்டால் பேசி முடிக்கிறேன், என்ற சர்.