பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/491

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பணம் தேடு படலம் 46! புதிய வீடு கட்டிக் கொண்டிருந்த சமயம் அது. இந்த வீட்டை ரூ. 600/- ( மாத) வாடகைக்கு அமர்த்திக் கொண்டு குடியேறினான் என் இளைய மகன். இவனைப் பார்ப்பதற்கு அடிக்கடிப் போகும்போதெல்லாம் திரு மாணிக்கத்தைப் பார்த்துப் பேசுவதுண்டு. இவர் பொருளாதாரம் படித்து எம்.ஏ. பட்டம் பெற்றவர். பேச்சுவாக்கில் என்ன டாக்டர் ரெட்டியார், நீல்கள் அந்தக் காலத்தில் எப்படி சைதைகி கல்லூரியில் இடம் பெற்றீர்கள்? என்று வினவினார். நான் சொன்னேன் ; விண் ணப்பித்தேன்; எவர் பரிந்துரையு மின்றிக் கிடைத்தது என்று, அவர், அப்படியா? நான் திண்டாடித் தெருவில் நின்று இடம் பெற்றேன். கல்லூரி திறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் வந்து கல்லூரியில் வட்டம்போட்டு முதல்வரைக் கெஞ்சிக் கூத்தாடி “'தாழ்வார சேர்க்கைகள்! (Verandah admissrons) என்று சொல்லு கின்றார்களே, அந்த முறையில் கிடைத்தது” என்று சொன்னபோது தான் நான் என் நல்வினைப் பெற்றால் கிடைத்தது என்று நினைத்துக் கொண்டேன். திருமகள் அருளின்றித் தொல்லைப்பட்ட எனக்கு அன்றிருந்து இன்று வரைக் கலைமகள் அருள் வரம்பின்றிக் கிடைத்து வருவதை நினைந்து பார்க்க முடிகின்றது. “சைதைக் கல்லூரியில் இடம் கிடைத்துவிட்டால் ஓராண்டுச் செலவிற்கு ரூ. 750/- வேண்டுமே. என்ன செய்வது?" என்ற எண்ணம் என் மனத்தில் நெருடிக்கொண் டிருந்தது. ஆலத்துடையாம்பட்டியில் ஒன்றரைக்குழி (66 செண்ட்) நஞ்சை நிலம் இருந்தது, அதிலிருந்து பன்னிரண்டு கலம் நெல் ஆண்டுக் குத்தகையாக வந்து கொண்டிருந்தது, இதை விற்றுவிடத் தீர்மானித்தேன். அன்றைய விலை குழி ஆயிரம் ரூபாய்; விற்றால் ரூ. 1500/- கிடைக்கும் என நினைத்து கோடையில்(ஏப்ரல்-மே 1940 மாதத்தில் அந்த ஊர்