பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/490

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

460 நினைவுக் குமிழிகள்-1 சென்னையையே தலைநகராகக் கொண்டிருந்தன. பத்து ஆண்டுகள் வரை பள்ளிகளில் ஆசிரியர் அநுபவம் பெற்ற பட்டதாரிகட்கும் இடம் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருந்தது. நான் விண்ணப்பித்தபோது துறையூரைச் சார்ந்த திரு M. கிருஷ்ணசாமி செட்டியார் (இவர் எம்.ஏ இயற்பியல் படித்து சுமார் பதினைந்து ஆண்டுகளாக மாவட்ட நீதி மன்றங்களிலும் வேறு இடங்களிலும் எழுத்தாளராகப் பணி யாற்றியவர்) என்பவரும், துறையூருக்கருகிலுள்ள கீரம்பூரைச் சார்ந்த திரு எஸ். சோமசுந்தர அய்யர் (இவர் வீரசை வர்; பி.ஏ. வரலாறு படித்து அங்கும் இங்குமாக (ஆசிரியராக இரண்டாண்டுகள் பணியாற்றிய அநுபவம் பெற்றவர்) என்ப வரும் விண்ணப்பித்திருந்தனர். நாங்கள் மூவரும் ஒருவரை யொருவர் நன்கு அறிவோம். மூவருமே இடம் கிடைப்பது பற்றிக் கவலைப்ட்ெடுக் கொண்டிருந்தோம். ஆனால், எல்லோருக்குமே கிடைத்துவிட்டது. அறிவியல் கணிதம் கற்ற பட்டதாரிகட்கும், இவற்றில் முதல் வகுப்பில் தேறின வர்கட்கும் கட்டாயம் கிடைக்கும் என்றும் பின்னர் அறிந்தேன். காரணம் இத்தகைய பட்டதாரிகள் அக்காலத் தில் மிகவும் அரியவராகவே இருந்தனர்; இவர்கள் பள்ளிகட்கு மிகவும் தேவைப்பட்டனர். அண்மையில் (1981 இல்) என்னுடன் பயிற்சி பெற்ற திரு கே. ஆர், மாணிக்கம் என்பவரை அண்ணாநகரில் முதன் முதலாகச் சந்திக்க நேர்ந்தது (40 ஆண்டுகட்குப் பின்னர்), அவர் இல்லத்தின் மாடிப் பகுதி வாடகைக்கு விடுவதாக விளம்பரம் செய்திருந்தார். நானும் என் இளைய மகன் டாக்டர் எஸ். இராமகிருஷ்ணனும் வீடுதேடி அலைந்த காலத்தில் இவர் தந்த விளம்பரத்தைக் கண்டு அந்த வீட்டிற்குச் சென்ற பொழுது இவரைச் சந்திக்க சேர்ந்தது. நான் என் மூத்த மகன் டாக்டர் எஸ். இராமலிங்கத்துடன் வாழ்ந்து கொண்டு அண்ணா நகரில் மனை ஒன்று வாங்கி