பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/489

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

VI, சென்னையில்-ஆசிரியப் பயிற்சிக் கல்லூரி வாழ்வில் குமிழி -60 60. பயிற்சிக் கல்லூரிக்குப் பணம்தேடு படலம் --


- ஓராண்டு மேற்கொண்ட வேலைதேடும் முயற்சி பயன் தரவில்லை . ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர முயன்றேன். அக்காலத்தில் சென்னை மாநிலத்தில் மூன்றே பயிற்சிக் கல்லூரிகள் இருந்தன. ஒன்று. சைதாப்பேட்டையிலுள்ள ஆசிரியர் பயிற்சிக்கல்லூரி, இது அரசு நடத்தும் கல்லூரி, வேப்பேரியில் பெண்களுக்காக 'லேடிகிரிஸ்டோபர் பயிற்சிக் கல்லூரி, என்ற ஒரு பயிற்சிக் கல்லூரியும் இருந்தது. மற்றொன்று, இராயப்பேட்டையிலுள்ள மெஸ்டன் பயிற்சிக் கல்லூரி, உரியகாலத்தில் (ஏப்பிரல்-மே, 1940) கல்லூரியிலிருந்து விண்ணப்பப் படிவம் பெற்று முறைப்படி விண்ணப்பம் அனுப்பினேன். மெஸ்டன் பயிற்சிக் கல்லூரியில் 50 பேர்கட்கு இடம்; பெரும்பாலும் இங்கு கிறித்தவர்கட்கு முன்னுரிமை வழங்கப்பெற்றது. இதனால் இக்கல்லூரிக்கு விண்ணப்பம் அனுப்பவில்லை. சைதையிலுள்ள அரசுக் கல்லூரியில் 200 பேர்கட்கு இடம் இருந்தது. அக்காலத்தில் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் இடம் கிடைப்பது எளிதல்ல. கேரளம், கர்நாடகம், ஆந்திரம் என்ற பகுதியிலுள்ளவர்க்கும் சென்னைதான் புகலிடம். காரணம், இப்பகுதிகள் 'சென்னை ராஜதானியிலில்' அடங்கி