பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/498

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

468 நினைவுக் குமிழிகள்-1 நாங்கள் பல்வேறு வசதிக் குறைகளை அநுபவித்தோம். கொசுக்கள் தொந்தரவு அதிகமாக இருந்தது. குடிநீர் வசதி கள் சரியாக இல்லை, கும்பகோணம் போலவே இங்கும் யானைக் கால் நோய் பரவலாக இருந்து வந்ததால் நாங்கள் அஞ்சிக் கொண்டே ஓராண்டைக் கழித்தோம், இறை யருளால் எங்கள் ஒருவரையும் இந்த நோய் தாக்கவில்லை. மாணவர் விடுதி ஊரைவிட்டுச் சற்று ஒதுங்கியே அமைந் திருந்தது; கல்லூரி வளாகத்திற்குத் தென் பகுதியில் அமைந் திருந்தது . இங்கிருந்து 'அடையாறு' என்ற ஆற்றைக் கடந்தால் சென்னை பொறியியல் கல்லூரி வளாகத்தை அடையலாம்; இது கிண்டியில் இருந்தது. அதை அடைய வேண்டுமானால் விடுதியினருகிலிருந்த மைதானத்தைக் கடந்து செல்ல வேண்டும். சில சமயம் இவ்வாறு கடந்து பொறியியல் கல்லூரி வளாகத்தைச் சுற்றிப் பார்ப்பதுண்டு. ஆசிரியர்க் கல்லூரியின் மாணவர் விடுதி ஓர் ஆசிரமத்தின் பொலிவை உண்டாக்கியது என்று குறிப்பிட்டேன் அல்லவா? அதைச் சற்று விளக்குவது இன்றியமையாததாகின்றது. தங்கும் அறைகள் A, B, C என்று மூன்று பகுதிகளாக அமைந்திருந்தன. A, C பகுதிகளில் ஒருவர் தங்கும் அறை களும், 8 பகுதியில் இருவர் தங்கும் அறைகளுமாக அமைந் திருந்தன. விரும்புகிறவர்கட்கு இருவர் தங்கும் அறைகள் ஒருவர் தங்குவதற்கும் தரப்பெறும் மரபும் இருந்து வந்தது' A,B பகுதிகள் வேப்பமரங்களால் சூழப்பட்டிருந்தன. நல்ல நிழலும் காற்றோட்ட வசதியும் நிறைந்திருந்தன. C-பகுதி புதிதாகக் கட்டப்பெற்றதால், அதன் அருகில் மரங்கள் இல்லாதிருந்தது. நான் A பகுதியிலிருந்தபோதும் B பகுதிக்கு மாற்றிக் கொண்ட பிறகும் நிழல் வசதியையும் காற்றோட்ட வசதியையும் நன்றாக அநுபவிக்க முடிந்தது. கொசுவலை மிகவும் இன்றியமையாததாக இருந்தது. அப்போது ரூ 6-க்கு