பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/499

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைதையில் என் கல்லூரி வாழ்க்கை 469 நல்ல அருமையான வலை கிடைத்தது. இப்போது ரூ 75/-க்கும் அத்தகைய வலை கிடைப்பதில்லை. படிப்பதற் கேற்ற இருக்கை வசதிக்களாக நாற்காலியும் மேசையும் இருப்பினும், பாடங்களைத் திருப்பும்போது நீண்ட நேரம் உட்காருவதற்கு நாற்காலி சௌகர்யமாக இருப்பதில்லை , இதற்காக பாரி முனையில் கித்தான் அமைப்புள்ள சாய்வு நாற்காலி (Easy chair) ஒன்று வாங்கினேன், தோதகத்தி மரத்தால் (Rose wood) ஆனது இது. விலை ரூ 3-8-0 (3-50) தான். இதில் உட்கார்ந்தால் ஆடக்கூடிய (Rocking) தாதலால் மிகவும் சொகுசாக இருந்தது. 1940இல் பாரி முனையில் வாங்கப்பெற்ற இஃது இன்றளவும் பயனளித்து வருகின்றது. இத்தகைய ஒன்று இப்போது ரூ 60/-க்குக் கூடக் கிடைக்காது. திருப்பதியிலிருந்தபோது (1967 என நினைக்கின்றேன்) இதில் ஓர் ஆணி முறிந்தது; வேறு எப்படியோ கெட்டு ஆடுவதில்லை ; ரூ 4/- கூலி தந்து பழுது பார்த்தேன், பல தடவை கித்தான் கள் புதிதாகப் போடப் பெற்றன. இந்த நாற்காலியில் உட்காரும் போதெல்லாம் நான் பயிற்சிக் கல்லூரியில் படித்த நாட்கள் நினைவில் எழும், விடுதியில் உணவு முறை மிக நன்றாக அமைந்திருந்தது. கைக்குத்தல் அரிசி (திரிகைபோல் சுற்றும் மரத்திரிகையில் நெல்லைப் போட்டு தவிடு வேறு, அரிசி வேறு. என்று பிரித் தெடுக்கப்பெற்ற அரிசி) தான் பயன்படுத்தப் பெற்றது; அரிசி மீதுள்ள மெல்லிய தோல் நீங்காதது. கண்பார்வைக்கு ஒரு மாதிரியாக இருப்பினும் உடல் நலத்திற்கு மிகவும் ஏற்றது. இத்தகைய அரிசி திருப்பராய்த்துறை விவேகானந்த வித்யாவனம் உயர்நிலைப் பள்ளி விடுதியில் சித்பவாநந்த அடிகள் பயன்படுத்தி வருகின்றார், இங்கு சமையலில் கஞ்சி வடிப்பதில்லை; சைதை உணவு விடுதியில் கஞ்சியை நீக்கினர், காலை ஆறு மணிக்கு காஃபி பானம்; ஒன்பது மணிக்கு தரப்