பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/500

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

470 நினைவுக் குமிழ்கள்-1 பெறும் உணவில், சாதம், கறி, கூட்டு, பச்சடி, சாம்பார், ரசம், அப்பளம் (அல்லது பப்படம்) இவை அடங்கியிருந்தன. நண்பகலில் ஏதாவது சாதம் (எலுமிச்சை, தேங்காய், புளியோதரை, கத்தரிக்காய்) அல்லது இட்டலி, தோசை, ஊத்தப்பம் என்று மாற்றி மாற்றி சிற்றுண்டி அமையும். மாலை நாலரை மணிக்கு காஃபி. இப்படி உணவு முறை அமைந்திருந்தது. மாணவர்களிலேயே உணவு செயலர் (Mess Secretary) என்று ஒருவர் தேர்ந்தெடுக்கப்பெற்று அவர் மூலம் ஒவ்வொரு நாளுக்கும் தரப்பெறும் உணவு, சிற்றுண்டி போன்றவை இன்னவை தான் என அறுதியிடப் பெறும். நாங்கள் படித்தபோது இப்போது சல்வித்துறையில் (நாங்கள் படித்த கல்லூரியிலேயே. முதல்வராகச் சில ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற திரு. கே. ஆர். மாணிக்கம்தான் உணவுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றிருந்தார். விடுதிக்குக் கல்லூரி முதல்வர் தான் (அப்போது முதல்வராக இருந்தவர் என்.ஆர். கிருஷ்ணம்மா என்ற ஆந்திரர்) விடுதி யின் தலைவர், வரவு செலவுக் கணக்குகளைப் பார்த்து வந்தவர் கல்லூரியுடன் இணைக்கப்பெற்றிருந்த மாதிரி உயர்நிலைப் பள்ளியின் அறிவியல் ஆசிரியர் ஒருவர், உண்பதற்கு மேசை நாற்காலி அமைப்பு முறை இல்லை; கீழே உட்கார்ந்து வாழை இலையில் உணவு கொள்ளும் பழக்கம்தான் நடைமுறையில் இருந்தது. அக்காங்லத்தில் இந்த வசதிகளுடன் உள்ள உணவு முறையில் தின சரிவிகிதம் 0.12-0 (0-75) மேல் போவதில்லை , இரவில் (ஒன்பது மணிக்கு) தேவையானவர்கட்கு பால் வழங்கப்பெற்றது. இதற்கு மாதத்திற்கு ரூ26/- தனியாகக் சணக்கிடப்பெற்றது, இந்த வசதிகளுடன் உணவு விடுதிக்குத் தர வேண்டிய கட்டணம் ரூ25/- ரூ26/-க்கு மேல் போவ தில்லை (சிப்பந்திகள் செலவு, அறை வாடகை உட்பட)