பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/501

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைதையில் என் கல்லூரி வாழ்க்கை 471 எண்ணிப் பார்த்தால் இக்கட்டணம் இப்போது குறைவாகத் தோன்றும்; அக்காலத்தில் இது அதிகமான தொகையாக இருந்தது. இலயோலா, பொறியியல் மருத்துவக் கல்லூரி விடுதிகளில் ரூ 50/- வரைகட்டணம் அமையும், பிற விடுதிகளில் உணவு முறை பார்ப்பதற்குத் தடபுடலாக இருந்தாலும், ஆசிரியர் கல்லூரி மாணவர்விடுதி உணவு தான் உடல் நலத்திற்கு ஏற்றதாக அமைந்திருந்தது. உணவுமுறையும், தங்கும் சூழ்நிலையும் ஏற்றனவாக இருந்தமையால் ஓராண்டுப் படிப்பு சிறப்புடன் சென்றது. குடிப்பதற்கு எப்படியோ நல்ல தண்ணீர் கிடைத்தது. இந் நீர் எந்தவித அச்சத்தையும் அருவருப்பையும் விளைவிக்க வில்லை. ஆனால் குளிப்பதற்குக் கிடைத்த நீர் சற்று அருவருப்பாக இருந்தது. ஒரே உப்பு மயம்; ஓரளவு கடல் நீர் போலவே இருந்தது. குளிர் காலத்திலும் சனிக்கிழமைகளில் எண்ணெய் குளியலின்போதும் வெந்நீர் தருவதற்கு ஏற்பாடு இருந்தது. ஒரு 50 கெஜ தூரம் சென்று குளித்து வர வேண்டும், கழிப்பிடங்கள் திருப்தி கரமாக இல்லை. அடித்துச் செல்லும் (Flushout) பாதாளக் கழிப்புமுறை இல்லை . இதனால் கொசுக்கள் பெருகுவதற்கும் வாய்ப்பாக இருந்தது. பாதாளச் சாய்க்க டை. (Underground Drainage) இல்லை : இதுவும் கொசுக்களின் தொல்லைகட்குக் காரணமாக இருந்தது. இஃதெல்லாம் ஓரளவு சிற்றூர் சூழ்நிலையைப் பிரதிபலித்தது.