பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/502

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமிழி-62 62. மறக்கமுடியாத சில நிகழ்ச்சிகள்


'உண்ணுவது, உறங்குவது, பிள்ளைகளைப் பெறுவது” என்பது போன்ற செயல்கள் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் இயந்திரச் செயல்கள்போல் நடை பெற்று வருகின்றன. ஓயாமல் நடைபெற்று வரும் இந்தச் சுழற்சியால், குடை இராட்டினத்தில் சுற்றுவோர் பெறும் ஒரு வித மயக்கத்தைப் போல், பெறும் ஒருவித மயக்கத்தின் காரணமாக சிந்திக்க நேரமின்றி இருக்கின்றனர். வாழ்வாவது மாயம் மண்ணாவது திண்ணம் என்ற சிந்தனை அன்றிருந்து இன்றுவரை என் சிந்தையில் எழும் ஒரு குமிழி. நோயால் பீடிக்கப்பெற்றுள்ள என் மனைவியைவிட்டுப் பிரிந்த நிலையில் இந்த எண்ணம் அடிக்கடி, என் மனத்தில் எழத்தொடங்கியது. இரவு உணவு கொண்டபின் உண வு விடுதியின் மைதானத்தில் உலவும் போது இந்த எண்ணம் வானத்தில் சதா விட்டுவிட்டு மின்னும் உடுக்கள் போல் என் மனத்தில் தோன்றிக் கொண்டே இருந்தது. உடல் நலம் பற்றி வகுப்பில் திரு. சிங்க் அவர்கள் நடத்திய பாடம் சூழ்நிலையின் காரணமாக என் மனத்தைக் கவர்ந்தது. உடல் அமைப்பு உள்ளுறுப்புகள் செயற்படும் முறை இவற்றை விளக்கும் நூலொன்றில் ஆழங்கால் பட்டேன். சிறு நீரகங்களில் ஏற்பட்ட கோளாறு காரண மாகச் சிறுநீர் குருதியுடன் கலந்து உடலில் சுற்றத் தொடங்கிய தால் உடல் முழுவதும் பூதாகாரமாக அடிக்கடி வீங்குவது, பின்னர் குறைவது போன்ற நிகழ்ச்சிகைளக் கண்டநிலையில் மருத்துவர் தரும் சிகிச்சை பலனளிக்காததால், சிகிச்சையை இறைவன் கையில் விட்டுவிட்டு ஆசிரியர் பயிற்சிப் படிப்பை மேற்கொண்டு சென்னை வந்த நிலை அடிக்கடி மனத்தில் எழுந்த வண்ணம் இருந்து கொண்டிருந்தது.