பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/503

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறக்க முடியாத சில நிகழ்ச்சிகள் 473 சில சித்தர்கள் 'காயமே இது பொய்யடா, காற்றடைத்த பையடா' என்று சொல்லி நிலையாமையை வற்புறுத்தி வந்த போதிலும், திருமூலர்போன்ற ஞானிகள் 'உடலை உத்தமன் கோயில் கொண்டான்' என்று கருதி உடலோம் பலின் இன்றியமையாமையைப் பற்றிக் கூறியுள்ள தும் அடிக்கடி நினைவிற்கு வந்தது. இந்தப் பிறப்பில் இந்த உடற் பயணம் செவ்வனே நடைபெறுவதற்கு உடலைப் போற்றி வாழவேண்டும் என்ற உண்மை என் மனத்தில் ஆழப் பதிந்தது. அக்காலத்தில் உடல் பற்றி எழுதப்பெற்ற தமிழ் நூல் சைதையில் என் கைக்குக் கிட்டவில்லை. நல்ல ஓர் ஆங்கில நூல்தான் கிட்டியது; நூலகத்திலிந்து அதை எடுத்து வைத்துக் கொண்டு படிக்கத் தொடங்கினேன் . கருத்து களை மனத்தில் நன்கு அமைத்துக் கொண்டேன். பதினைந்து நாட்களுக்கு ஒன்று வீதம் உடலமைப்பு, உள்ளுறுப்புகள், குருதிமண்டலம், கழிவு மண்டலம், நரம்பு மண்டலம், இனப் பெருக்க உறுப்புகள் போன்றவற்றைப் பற்றி கடிதங்கள் எழுதி என்கவலையை மறந்தேன்; இதனால் உடல் பற்றிய செய்திகளில் தெளிவு ஏற்பட்டிருத்தல் கூடும். இந்த முயற்சி தான் பிற்காலத்தில் 'இல்லறநெறி' (1964) முத்திநெறி (1982) சைவ சமய விளக்கு (1984) என்ற நூல்களை எழுதும்போது கடித உத்தியைக் கையாளச் செய்ததோ என்பதை நினைந்து பார்க்கின்றேன். நான் கல்லூரியில் சேர்ந்த ஒன்றிரண்டு மாதங்களில் என் மாமனார் ஊரிலிருந்து A. இராமச்சந்திர ஆச்சாரி (பொற் கொல்லர்) வந்தார். இவர் தான் என்மைத்துனருடன் நான் திருச்சியில் பட்டப் படிப்பு படித்தபோது என்னைச் சந்தித்துத் திருமணம் முடித்தவர். இவர் எதோ நோய்வாய்ப் பட்டு நாமக்கல், சேலம் போன்ற இடங்களில் பெரிய மருத் துவர்களைக் கலந்து ஆய்ந்ததில் அவர்கள் யாவரும் இவர் இருமல் நோயால் (Tuberculosis) பீடிக்கப் பெற்றுள்ளார்