பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/504

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

474 நினைவுக் குமிழ்கள்-1 என்றும், அதற்குக் கருமையான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஒருமித்த கருத்தினைத் தெரிவித்ததால் இவர் மிகவும் அச்சம் எய்தி சென்னையில் அப்போது பெரும் புகழ் பெற்றிருந்த டாக்டர் குருசாமி முதலியாரைக் கலந்து யோசிக்கவேண்டும் என்று என் உதவியை நாடிச் சென்னை வந்தார். முன்னதாகக் கடிதம் எழுதினார். நானும் முகவரியை விவரமாகத் தந்து எந்தெந்த இருப்பூர்திகளில் ஏறி எங்கெங்கு இறங்கிச் சைதை வர வேண்டும் என்றவிவரங் களை எழுதியிருந்தமையால் அவர் எளிதாக வந்து சேர்ந்து விட்டார், ஒரு ஞாயிறு அன்று காலையில் டாக்டர் குருசாமி முதலியாரைப் பார்ப்பதென்று முடிவு செய்தோம், டாக்டர் முதலியார் கீழ்ப்பாக்கத்தில் இருந்து வந்தார். காலை எட்டரை மணி சுமாருக்கு அவர் இல்லத்தை அடைந்தோம், அரசு மருத்துவமனையிலிருந்து ஓய்வு பெற்றபின்னர் மக்கள் நல்வாழ்வுக்காக பிணியாளர்களைப் பார்த்து வந்தார். இலவச மாகவே சேவை செய்து வந்தார். ஓய்வுபெற்ற பிறகு இவர் இலவசப்பணியில் ஈடுபட்டிருந்த பொழுது இறைவனே இவர் நெஞ்சில் அமர்ந்து கொண்டு பிணியாளர்கள் பார்த் தானோ என்ற நம்பிக்கை அனைவர் மனத்திலும் தோன்றி வேரூன்றியது. நாங்கள் சென்றபோது கூட்டம் இல்லை. வயது முதிர்ந்த நிலையில் ஒரு முனிவர்போல் காணப்பட்டார். என் நண்பர் ஆச்சாரி தன்னுடைய நோயைப்பற்றியும் நாமக்கல், சேலம் மருத்துவர்கள் கூறிய கருத்துகளையும் எடுத்துரைத்தார், டாக்டர் முதலியார் ஒன்றும் பேசவில்லை, ஆச்சாரியை மேலும் கீழும் நோக்கினார், இமைகளை அகட்டி கண்களைச் சோதித்தார். உடனே மருந்தை எழுதித் தந்தார். “இதைச் சாப்பிடுங்கள்; குண மாகி விடுவீர்கள்" என்று ஆ ஈ) கூறினார் என்று சொல்ல வேண்டும், ஆச்சாரி பேசத்தொடங்கினார். பின்பக்கமாக நின்று கொண்டிருந்த