பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/505

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறக்க முடியாத சில நிகழ்ச்சிகள் 475 ஒருவர் கையால் சைகை மூலம் பேசவேண்டாம் என்று தெரிவித்தார். “கட்டணம் எவ்வளவு? என்று கேட்டபோது டாக்டர் முதலியார் பேசவில்லை . ஆச்சாரி ரூ10/-ஐ எடுத்து மேசை மீது வைத்துவிட்டு அகன்றார். ரூபாய் தாள் காற்றில் பறந்து அறையெங்கும் கிடந்த பல ரூபாய்த்தாள் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டது. இந்தத் தாள்களை யெல்லாம் பொறுக்கி ஏதோ அறச்சாலைக்குப் போகிறதாகக் குறிப்பிட்டார்கள் அங்கு வந்து சேர்ந்த வேறு பிணியாளர்கள் நாங்கள் வரும் வழியில் ஒரு மருந்துக் கடையில் ஒரு மாதத்திற்குத் தேவையான மருந்துகளை வாங்கிக் கொண்டு திரும்பினோம். அன்றிரவே இருப்பூர்திக்குப் பயணச்சீட்டு வாங்கிக்கொண்டு சேலம் வழியாக பொட்டணம் திரும்பினார். காலாண்டுத் தேர்விற்குப் பின்னர் கிடைத்த இரண்டு வார விடுமுறையில் பொட்டணம் சென்றேன். என் மனைவியின் உடல்நிலை முக்கால் வாசி சீர்பட்டிருந்தது. இராமச்சந்திர ஆச்சாரியும் டாக்டர் குருசாமி முதலியார் குறிப்பிட்ட மருந்துகளை உண்டு மூன்று நான் குமாதங் களில் நன்கு குணம் அடைந்தார், மூன்று மாதங்கள் கூட பிழைத் திருப்பது அரிது என்று சொன்ன நாமக்கல், சேலம் மருத்துவர் களின் வாக்கு பொய்த்தது 'எம் பெருமான் மரு * தாயும் இருப்பான்; மருத்துவனாயும் இருப்பான்' என்பது ஆழ்வார் களின் கருத்து. இராமச்சந்திர ஆச்சாரி விஷயத்தில் எம் பெருமானே குருசாமி முதலியார் வடிவில் இருந்து, அவர் குறிப்பிட்ட மருந்து மாயும் இருந்து நோய் தீர்த்தான் போலும் என்று கருதுவது பொருத்தம் எனத் தோன்று கின்றது. பேயாழ்வாரின் “'உலகம் உண்டு உமிழ்ந்து நீரேற்று மூவடியால், அன்றுலகம் தாயேன் அடி... மருந்தும் பொருளும் அமுதமும் தானே* 81 என்ற வாக்கு இப்போது நினைவு கூரவும் முடிகின்றது. திரு ஆச்சாரி இன்னும் வாழ்கின்றார் (80க்குமேல்), 30. முன், திருவந். 4