பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/506

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

476 நினைவுக் குமிழ்கள்-1 என்னுடைய மனைவியின் நோயை அன்று திருச்சியில் புகழோங்கித் திகழ்ந்த டாக்டர் காளமேகம் 'நோய் நாடி நோயின் குணம் நாடி அதுதணிக்கும் வாய் நாடி. வாய்ப்ப ச் செய்தார். மருந்தினைக் குத்தில் புகுத்தின பொழு தெல்லாம் உடல் வீக்கம் வாடியது; மருந்தை நிறுத்தினால், மீண்டும் வீக்கம் தோன்றியது. அவருக்கே இஃது ஒரு புதிர் போல இருந்தது. ஒன்றிரண்டு மாதங்கள் திருச்சியில் - தென் னூரில் அவர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றும் நோய் முற்றிலும் நீங்கவில்லை, ஆயிரம் ரூபாய்க்குமேல் வரை செலவாயிற்று. ஆனால் நோயின் வேகம் குறைந்தது புல னாயிற்று. ஆகவே பொட்டணம் திரும்பி மருந்தும் உனட்டச் சத்து தரும் மருந்தும் அருந்தி ஓய்வாக இருந்தால் போதும் என்று கருதி இறைவன் மீது பாரம் போட்டு ஊர் வந்து சேர்ந்தோம். ஜூன்-1910ல் நோய் நீங்காத நிலையில் தான் என் மனைவியை விட்டுப்பிரிந்து சென்னை சென்றேன், செப்டம்பர் வாக்கில் 75 விழுக்காடு குணமாயிற்று; டிசம்பர் விடுமுறை வந்தபோது முற்றிலும் குணம் ஆயிற்று. மருந்தும் இறை வழிபாடும் சேர்ந்து நோய் நீங்குவதற்குக் காரண ல் களாக அமைந்தன. இதனை எழுதும் போது, வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால் மாளாத காதல்நோ யாளன்போல், மாயத்தால் மீளாத் துயர்தரினும் வித்துவக்கோட்(டு) அம்மா! நீ ஆளா உன தடியேன் பார்ப்பன் ஆடியேனே 89 என்ற குலசேகராழ்வாரின் பாசுரம் நினைவிற்கு வருகின்றது; ஆழ்ந்து சிந்தித்து இறைவழிபாட்டின் மேன்மையை உணர் 31. குறள்-948 32, பெரு. திரு. 5:4