பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/507

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறக்க முடியாத சில நிகழ்ச்சிகள் 477 கின்றேன். அவன் தாள் வணங்குவதற்கும் அவன் அருள் தேவைப்படுகின்றது என்ற மணிவாசகரின் வாக்கையும் சிந்திக்கின்றேன். அன்று (1940) டாக்டர் குருசாமி முதலியாரைப் பார்த்தது இறைவனையே கண்டது போன்ற உணர்வு ஏற்படு கின்றது, இறைவன் குருவாகவும் எழுந்தருளுவான் என்று சொல்வதுண்டு. தாயுமான அடிகள் முன் இறைவனே மெளன குருவாக எழுந்தருளி ஆட்கொண்டதையும் நினைந்து பார்க்க முடிகின்றது', டாக்டர் குருசாமி முதலியாரைப் பார்த்தபோது அங்கு ஒரு நோயாளியுடன் துணையாக வந்த ஒரு பெரியாரிடம் உரையாடிய போது அவர் சொன்ன ஒரு நிகழ்ச்சியை ஈண்டு குறிப்பிடுவது பொருத்தமாகும். மேட்டுக் குடியைச் சார்ந்த ஒரு வைணவப் பெண்மணி ஒரு சமயம் தாங்க முடியாத தலைவலியுடன் டாக்டர் குருசாமி முதலியாரிடம் வந்தாள் தன் தந்தையாருடன், அவர் மூக்கிலும் காதிலும் முறையே உயர்ந்த வயிரத்தாலான மூக்குத்தியையும் காதணியையும் அணிந்திருந்தார், டாக்டர் குருசாமி முதலியார் அப்பெண்மணியின் முகத்தை உற்று நோக்கினார், உடலைப் பொருத்தமட்டிலும் எந்தவிதமான நோய்க்குறிகளும் இல்லை. அவர் சிந்தனை செயற்படத் தொடங்கியது. அந்தப் பெண்மணியை நோக்கி, "அம்மா, உங்கள் மூக்குத்தி மிகவும் நன்றாக இருக்கின்றது; காதணி களும் அற்புதம், என் பேத்தி திருமணத்திற்குத் தயாராக இருக் கின்றாள். காதிற்குத் தோடுகள் தயராகிவிட்டன. மூக்குத்தி பற்றி இன்றும் எந்த மாதிரி செய்யலாம் என்பது தெளியாத தால் இன்னும் எந்தக் கடைக்குக் கட்டளை தருவது" என்பதை அறுதியிடவில்லை. உங்கள் மூக்குத்தி அழகாக உள்ளது. இதைக் கழற்றிக் கொடுங்கள். என் பேத்திக்குப் பிடித்திருந்தால், பாபலால் கம்பெனியில் செய்ய வேண்டி, யிருக்கும். ஒரு வாரத்தில் திருப்பித் தந்து விடலாம் என்று