பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/508

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

478 நினைவுக் குமிழிகள்-1 கூறி மூக்குத்தியைக் கழற்றி வாங்கிக்கொண்டார். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தன்னைக் காணுமாறு பணித்தார். அப்படியே அந்தப் பெண்மணியும் வந்து வந்து போனாள் . இப்போது வலி குறைந்தவிருக்கிறது" என்று சொல்லிச் சொல்லித் திரும்பினாள். டாக்டர் முதலியாருக்குத் தாம் சருதியது சரி என்றே பட்டது. ஒரு பத்து நாட்களுக்குள் தலைவலி முற்றிலும் நீங்கியதாகத் தெரிவித்தார் அந்தப் பெண்மணி. டாக்டர் முதலியார் “அம்மா. இந்தச்சனியன் மூக்குத்தியைக் கழற்றி எறியுங்கள். இதன் பிரகாசம் தான் உங்கள் கண்களில் தாக்கித் தலைவலியை விளைவித்தது. இனி, சாதாண புஷ்பராகத்தில் நல்ல தொன்றைத் அணிந்து கொள்ளுங்கள். காதில் இருப்பது அப்படியே இருக் கலாம் என்று சொல்லி மூக்குத்தியைத் திருப்பித் தந்தார். டாக்டர் முதலியாரின் நோயின் அணுகும் முறையைக் கண்டு என் மனம் வியப்பில் ஆழ்ந்தது , சிறந்த மருத்துவராக இருந்த தால் தம்முடைய அனுபவத்தைக் கொண்டு 'நோய் நாடி நோயின் குணம் நாடி அது தணிக்கும் வாய் நாடி, வாய்ப்பச் செய்தல் வேண்டும்' என்பது தெரிந்தது. இந்த நிகழ்ச்சி இன்னும் என் மனத்தில் பசுமையாக உள் ளது. டாக்டர் முதலியார் இன்றும் என் மனத்தில் உபநிடத முனிவர் போல் நீங்காத இடம் பெற்றுத் திகழ்கின்றார். மருத்துவத்துறையில் பணி புரியும் மருத்துவர்கட்கு டாக்டர் முதலியார் ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகின்றார். பிணியாளர்களின் நோயினைப் போக்குவது தம் குறிக் கோளாகக் கொண்டால், பணம் தானாக வந்தடையும், பிணியாளர்களின் மு க ம ல ர் ச் சி மருத்துவர்களிடம் திருமகளின் கடைக்கண் நோக்கை அருளும், மருத்துவப்பணி தெய்வப் பணி என்பதை நோக்கமாகக் கொண்டு பணி யாற்றுவது மருத்துவர்களின் கடமை. இறைவனே நோயைப் போக்குகின்றான், தாம் ஒரு கருவியாக நின்று பணியாற்றுகின்