பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/509

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறக்க முடியாத சில நிகழ்ச்சிகள் 479 றோம் என்பது மருத்துவர்கள் மனத்திலிருத்த வேண்டிய ஒரு சேருண்மையாகும், இங்ஙனம் எழுதும்போது , நின்னையே தான் வேண்டி நீள் செல்வம் வேண்டா தார் தன்னையே தான் வேண்டும் செல்வம் போல், மாயத்தால் மின்னையே சேர்திகிரி வித்துவக்கோட் டம்மானே! நின்னையே தான் வேண்டி நிற்பன் அடியேனே 8 8 என்ற குலசேராழ்வாரின் பாசுரத்தை நினைவு கூர்கின்றேன். எந்தப் பணியையும் தெய்வப் பணியாகக் கருத வேண்டும் என்பது பொதுவிதியாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றாலும், மருத்துவப் பணியை மேற்கொள்வோர் இதனைச் சிறப்பாகக் கருத்தில் இருத்த வேண்டும். பிணிப்பா ளர்கள் நோயால் தாக்குண்டவர்கள்; உயிர் ஊசலாடும் நிலையில் தம்மிடம் வருகின்றனர். மருத்துவர்கள் பணியைத் தம் வாழ்வுக்குரிய தொழிலாக மேற்கொண்டிருப்பினும், அவர்களிடம் இரக்க உணர்வு மேலோங்கியிருத்தல் இன்றி யமையாதது. இதனால பிணியாளர்களின் மனம் குளிரும்; நம்பிக்கை முகிழ்க்கும். இதனால் நோயும் விரைவில் நீங்க வாய்ப்புண்டு. திருக்கோயிலுக்கு வழி பாட்டுக்குச் செல்லும் பக்தர்கள் போல் பிணியாளர்கள் மருத்துவமனைக்கு வரு கின்றனர்; இறைவனைக் காண்பதுபோல் மருத்துவ ரைக் காண்கின்றனர். தங்கள் தொண்டிற்கு வறியர் உட்பட எல் லோரும் தரக் கூடிய அளவிற்குக் கட்டணங்களை அறுதியிட்டு நடைமுறைப் படுத்துவது இன்றியமையாததாயினும், பிணி யாளர் நலிவை நீக்குவதே தம் முதற்கடமையாக இருத்தல் 33. பெரு. திரு , 5:9