பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/510

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48) நினைவுக் குமிழிகள்-1 வேண்டும், இலைவனே மருத்துவராக நின்று தம் பிணியைப் போக்குகின்றான் என்ற உணர்வு பிணியாளர்களின் மனத்தில் எழும் படியாகத் தம் கடமையை ஆற்ற வேண்டும்; கட்டுப்பாடும் கண்ணியமும் தலைதூக்கி நிற்க வேண்டும் . இங்ஙனம் நடந்து கொள்ளும் மருத்துவர்களைப் பிணியாளர் கள் வாழ்த்துவார்கள். எதிர்பாராத விதமாக இறை யருளால் மருத்துவர்களிடம் பணமும் குவியும். மருத்துவ 2.லகிற்கு இன்றும் கலங்கரை விளக்காகத் திகழ்பவர் டாக்டர் குருசாமி முதலியார். சென்னை அரசினர் கல்லூரி நுழைவாயிலின் இடப்புறம் திகழும் அவருடைய சிலை மருத்துவப் படிப்பிற்காகக் கல்லூரியில் புகும் மாணாக்கர் கட்கு வழிகாட்டியாக உதவும் என்பது என் கருத்து. மருத்துவ மாணாக்கர்கள் இந்தச் சிலையைத் தரிசித்துத் தம் வாழ்க் கையை நெறிப்படுத்திக் கொள்வார்களா? குமிழி -63 63. பயிற்சிக் கல்லூரிப் பேராசிரியர்கள் அக்காலத்தில் திருச்சியில் இளங்கலை வகுப்பில் படிக்கும் மாணவர்களுடனும், பயிற்சிக் கல்லூரி மாணவ - ஆசிரியர்களுடனும் பழகும்போது மரியாதைப் பன்மை யுடன் (வாருங்கள், செல்லுங்கள் என்பது போல) பழகும் பழக்கங்கள் நடைமுறையிலிருந்து வந்தன, இளங்கலை வ தப்புகளில் ஓரே உயர்நிலைப்பள்ளி பில் படித்து 'வா, போ' என்று பழகிய பழக்கத்தால் கல்லூ குரிக் வந்த பிறகும் ஓரிருவர் 'வா, போ' என்று பழகும் பழக்கத்தைத் தவிர்க்க முடியாதிருந்தது . ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில் ஒருமையாக விளித்துப் பேசும் பழக்கம் அடியோடு ஒழிந்தது , இன்றைய சூழ் நிலையில் எண்ணற்ற மாணாக்கர்கள்