பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/511

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயிற்சிக் கல்லூரிப் பேராசிரியர்கள் 481 சேர்ந்து படிக்கும் நிலையில் நல்ல பழக்கங்கள் அருகி வருவ தைக் காண முடிகின்றது. கல்வித்தரமும் குறைந்து விட்டது. தேர்வு முறைகளாலும் பெற்றோர்கள் குறுக்கிடுவ தாலும் பரிந்துரைகளும் அரசியலும் பணப்புழக்கமும் செயற்படுவ தாலும் 'பணவீக்கம் போல்' 'மதிப் பெண் வீக்கமும் மிகுந்து காணப்படுகின்றது. இப்பொழுது 10- வது வகுப்புத்தேர்வில் 600 க்கு 590 வரை பெறுவதைக் காண்கின்றோம். நான் படித்த காலத்தில் பள்ளி இறுதித் தேர்வுகளில் 600 க்கு 450 மதிப்பெண்கள் பெறுவது அரிதாக இருந்தது. 300- 360 360- 40) என்று மதிப் பெண்கள் பெறும் மா ண வர்கள் முறையே 31) விழுக்காடு, 20 விழுக்காடு என்று எண்ணில்கை யில் தான் இருந்தனர். பெரும்பாலோர் 300) க்குக் கீழ்தான் மதிப்பெண்கள் பெறுவோராக இருந்தனர். 210 வாங்குவோர் பெரிய அளவில் இருந்தனர். நான் பயிற்சிக் கல்லூரியில் படித்தபோது கல்விபற்றிய கருத்துகள் பயிற்சி பெறுவோரால் மறை மொழிகள்போல் போற்றப் பெற்றன, இயன்றவரை நடைமுறையில் செயற் படுத்த முற்பட்டோம். புதிய கல்வி முறைகள், உளவியல் கருத்துகள் எங்கட்கு மன நிறைவினைத் தந்தன, கல்லூரியில் மாதிரிப்பள்ளி மாணவர்களைக் கொண்டு நடைமுறைப் பயிற்சிகளை நாங்கள் பெறும்போது மிகப் பொறுப்புடன் நடந்து கொண்டோம். ஆந்திரம், கேரளம், கர்நாடகம் போன்ற பகுதிகளிலிருந்து வருபவர்களிடம் நெருங்கிப் பழகிய தால் ஒருவித ஒருமைப்பாட்டு உணர்ச்சியைப் பெற்றோம். இன்றைய நிலையில் ஒருமைப்பாடு அதிக மாகப் பேசப்படுகிறது'. மொழி வாரியாக மா நிலங்கள், பிரிந்த பிறகு 'வெறுப்புணர்ச்சி' வளர்ந்து வருகின்றது; ஒருமைப்பாடு வேண்டும் என்ற கூக்குரல் தம்பட்டம் அடிக்கப்படுகின்றது. பயனோ விழலுக்கு இறைத்த நீர் போலத்தான். -31-