பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/512

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

482 நினைவுக் குமிழிகள்-1 நான் பயின்ற காலத்தில் கல்லூரியில் பணியாற்றிய பேராசிரியர்களில் நினைவுகூர முடிகின்றவர்கள் திரு. குருசாமி ரெட்டியார் (உளவியல்), திரு. சீமான்பாதர் (ஆங்கிலம்), திரு. கே.சி. வீரராகவ அய்யர் (இயற்பியல்), திரு. சிங்க் (இயற்கை அறிவியல்), திரு. என். இரகு நாத அய்யங்கார் (கணிதம்), திரு . தேசிகாச்சாரி (வரலாறு) ஆகி (யோர்; உடற்பயிற்சி ஆசிரியர் பெயர் நினைவு இல்லை .

  • உடற்பயிற்சி செய்வதில்லை கூடைப்பந்து, பூப்பந்து, எறி

பந்து (volley bal) கால்பந்து. டென்னிகாய்ட் போன்ற விளை யாட்டுகள் மட்டிலும் புழக்கத்தில் இருந்தன. நான் எறிபந்து, கூடைப்பந்து, டென்னி காய்ட் போன்ற விளை யாட்டுக்களில் கலந்து கொள்வேன்; அதிக ஊக்கத்துடன் கலந்து கொள்வ தில்லை. சனிக்கிழமையோ ஞாயிறு அன்றோ (நினைவுகூர முடியவில்லை) எங்கள் கல்லூரிக்கு அடுத்துள்ள உடற்பயிற்சி கல்லூரிக்குக் காலை ஆறு மணிக்குப் போவோம். கல்லூரி முதல்வர் உலகப்புகழ்பெற்ற திரு. பக் (Buck) என்பார் ஏதோ சில உடற்பயிற்சிகளில் பழக்கு வார். அவரிடம் கற்றது மிகப் பெருமையுடன் நினைவுகூர முடிகின்றது. அவர் பேச்சு நகைச் சுவையுடன் மிளிர்வதால் அஃது எங்களை மிகவும் ஈர்க்கும். ஞாயிறு காலை எட்டுமணி வரை காலம் உற்சாகமாகப் பயனுள்ள முறையில் கழியும், நான் பயின்றபோது தமிழ் கற்பிக்கும் முறை பயிற்றுவிக்க வகை செய்யப்பெறவில்லை, அதனால் பயிற்சிக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர் நியமனம் பெறவில்லை . பேராசிரியர் சீமான்பாதர் ஆங்கிலம் கற்பிக்கும் முறை களை மிக அற்புதமாக விளக்குவார் என்று அவரிடம் பயின்ற மாண வர்கள் பேசிக்கொள்வதைக்கேட்டதுண்டு. என் நண்பர் கே. நாராயண அய்யங்கார் (திரு அரங்கத்திலிருந்து வந்தவர்) திரு. பாதரின் சொற்பொழிவு கவர்ச்சிகரமாக இருக்கும் என்று அடிக்கடிச் சொல்லி மகிழ்வார், பேராசிரியர்