பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/513

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயிற்சிக் கல்லூ ரிப் பேராசிரியர்கள் 483 தேசிகாச்சாரி எப்பொழுதும் புன்முறுவல் பூத்த முகத்துடன் காணப்பெறுவார். இவரது சொற்பொழிவு களும் விளக்கங் களும் கவர்ச்சிகரமாகவும் பயனு 'ை.-யனவாகவும் இருக்கும் என்று என் நண்பர் கே, நாரா யண அய்யங்கார் அடிக்கடிச் சொல்லி மகிழ் வதைக் கேட்டிருக்கின்றேன் . பேராசிரியர் என். இரகுநாத அய்யங்கார் (கணிதப் பேராசிரியர்)எப்பொதும் சுறுசுறுப்பாக இருப்பார்: மாணவர் க ளுடன் கண்ணியமாக நடந்து கொள்வார். ஒரு மணி நேரப் பேச்சில் நாற்பது மணித்துளிகள் தாம் பேச்சு இருக்கும்; மீதி நேரத்தைக் கலந்தா ய்தலுக்குப் பயன்படுத்துவார். இவரு டைய வகுப்புகளை தட்டும். துறைக்குரிய நூலகத்திற்கு என்னை நூலகராக வகுப்பு தேர்ந்தெடுத்தது. நூல்களை மாணாக்கருக்கு வழங்குவது, திரும்பப் பெறுவது போன்ற செயல்களில் பேராசிரியர் அய்யங்காருக்கு நன்கு உதவுவேன் அவரும் என்னுடைய சுறுசுறுப்பைக் கண்டு பாராட்டுவார்; பொறுப்புடன் ஆற்றும் பணியைக் கண்டு மெச்சுவார். நன்கு படிக்க வேண்டிய நூல்களைச் சுட்டிக் காட்டுவார். அவற் றைப் படித்து எழுதிவைத்திருந்த குறிப்புகள் தேர்வுக்கு நன்கு உதவின; அதிக மதிப்பெண்களையும் பெற முடிந்தது. நலவாழ்வுக் கல்வி (Health Education) பற்றிய படிப்பை இயற்கை நூல் பேராசிரியர் திரு . சிங்க் அவர்கள் கற்பித்த தாக நினைவு. உடற் கல்வியை யார் கற்பித்தார் என்பது நினைவிற்கு வரவில்லை, இந்தப் பாடங்களைக் கற்பித்தவர் கள் எந்தவிதமான எழுச்சியையும் என்னிடம் ஏற்படுத்த வில்லை. அதனால் தான் அவர்களைப்பற்றிய நினைவே இல்லை . பேராசிரியர் கே. சி. வீரராகவ அய்யர் அறிவியல் பேராசிரியர். இவர் வகுப்பில் அறிவியல் கற்பித்தல் பற்றிய முறைகளை ஒழுங் காகச் சொல்வதில்லை. வகுப்பில் எதை