பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/514

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

484 நினைவுக் குமிழிகள்-1 எதையோ தமக்குத் தெரிந்தவற்றையெல்லாம் பேசிக் கொண்டு காலத்தை வீணாக்குவார். மூன்று நான்கு மாண வர்களை நோக்கியே ஏதாவது பேசிக்கொண்டே யிருப்பார். ஏனையவர்கட்கு அலுப்பும் சலிப்பும் தட்டி விடும். இவர் சிரிப்பதிலோ முறுவலிப்பதிலோ கவர்ச்சி இராது. நஞ்சு கலந்திருப்பது போன்ற சாயை தோன்றும். இவர் போன்றவர்கள் அறிவியல் பாடங்களில் புலமை இல்லாதவர் கள் எனக் கருத இடந் தருகின்றது. எல்.டி, பட்டம் பெற் றிருந்தமையால் பயிற்சிக் கல்லூரியில் தள்ளப்பட்டு விட்டாரோ என்று நினைக்கத் தோன்றுகின்றது. தமக்குப் பிடிக்காதவர்களைத் தேர்வில் 'கழுத்தை அறுத்து விடுவார்' என்று இவரைப்பற்றிய பேச்சு உலவியது. அந்தக் காலத்தில் எந்த ஆசிரியர்களைப்பற்றியும் யாரும் தவறாகப் பேசுவ தில்லை. இவரைப்பற்றி மட்டிலும் இத்தகைய பேச்சு எழுந்ததால் இதில் உண்மை இருக்க வேண்டும் என்பது என் நினனப்பு. இராமமூர்த்தி (பி.எஸ்.சி. (ஆனர்ஸ்) படித்தவர்), நடேசன் (பி. எஸ்.சி, படித்தவர்), T. D. சுப்பிரமணியம் (பி.ஏ. படித்தவர்) இவர்கள் தாம் வகுப்பில் இந்தப் பேராசிரியரிடம் அதிகமாகப் பேச்சில் கலந்து கொள்பவர் கள். இவர்கள் தேர்வில் எதை எழுதினாலும் அது சரியான தாக ஏற்றுக் கொள்ளப்பெறும். பலரைத் தேர்வில் பலி யாக்கியதையும் கண்டேன். பிராமணரல்லாதார் முன்னுக்கு வருவதைத் தடுத்துவிடுவார் என்றும் பேசிக் கொள்வார்கள். சிறிது கூட உண்மையின்றி ஒருவரைப்பற்றி இவ்வாறு தவறான பேச்சு எழாது என் றே நினைக்கத் தோன்று கின்றது - பேராசிரியர் குருசாமி ரெட்டியாரின் வகுப்புதான் அற்புதமாக இருக்கும். இருநூறு மாணாக்கர்கள் அடங்கிய வ குப்பை அற்புதமாகக் கையாளுவர். வகுப்பிற்கு வருங்கால் இவர் உதவியாள் இருபதிற்குக் குறையாமல் நூல்களை