பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/515

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயிற்சிக்கல்லூரிப் பேராசிரியர்கள் 485 மேசைமீது கொண்டு வந்து வைப்பான். ஒவ்வொரு நூலின் பெயர், அதனை இயற்றிய ஆசிரியரின் பெயர் கூறி அந்த நூலின் உள்ளுறையை (Contents) மாற்றி மாற்றிப் படிப்பார். இவர் செய்கையைக் கூர்ந்து கவனித்தால் இந்த நூல்களின் துணை கொண்டுதான் கல்வி உளவியல் பாடத் திட்டத்தை வகுத்தனர் என்பதை விளக்குவது புலனாகும், இடை இடையே பாடத்திட்டத்திலுள்ள பல கருத்துகளை மின்வெட்டு போல் ஒளி காட்டி விளக்குவார். இங்கிலாந்தில் படித்தபோது வெள்ளைக் கார மா தினைத் திருமணம் புரிந்து கொண்டு மணமுறிவு ஏற்பட்டதன் விளைவாக இவர் ஒரு விதக் கிறுக்குத்தனமாக நடந்து கொள்ளுகின்றார் என்று பேச்சு அடிபட்டது. இவர் போக்கும் ஒருவிதமாகத்தான் இருந்தது. இவர் சிரிப்பும் எவரையும் கவராது. வெறுப்பு கலந்த பார்வை, நஞ்சு கலந்தது போன்ற சிரிப்பு--இவர் தம் உள்ளக்கிடக்கையைப் புலப்படுத்தி விடும். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற பழமொழி இவருக்கு முற்றிலும் பொருந்தும் என்ற போதிலும், இவர் விபரீதமான கற்பிக்கும் முறையைக் கையாண்டாலும் இவர் போக்கைக் கருத்திற் கொள்ளாது வகுப்பில் நடந்து கொள்ளும் முறையை உன்னிப்பாகக் கவனித்தால் கல்வி உளவியல் பற்றிய கருத்துக் களஞ்சியத்தை நன்கு பெறலாம். இருநூறு பேர்களடங்கிய ஒரு பெரிய வகுப்பில் ஒரு நாற்பது பேராவது இவர் பாடம் நடத்தும் முறையால் பயன் பெற்றனராகக் கருதுகின்றேன், நான் நன்கு பயன் அடைந்தேன் என்பதை மட்டிலும் குறிப்பிடாமல் இருக்க முடிவதில்லை . 1985 திசம்பர் திங்களில் 'கல்வி உளவியல் கோட்பாடுகள் என்ற ஓர் அரிய நூலை வெளியிட்டேன். நான் கல்வி உளவியலில் ஆழங்கால் படு வதற்கும் அதில் மேலும் மேலும் ஆர்வம் எழுவதற்கும் காரணமாக இருந்த பேராசிரியர் குருசாமி ரெட்டியார் அவர்கட்கு இந்த நூலை