பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/516

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

486 நினைவுக் குமிழிகள்-1 தலம்புகழ் சைதைப் பயிற்சிக்கல் லூரி சால்புறப் புரிந்தபே ராசான்; நலம்பொலி உளத்தின் இயல்பினை விரிக்கும் ஞானசூ ரியனெனத் திகழ்ந்தோன்; புலம்பெற எனக்கு நுண்ணுணர்வு அளித்த புண்ணியன்; தண்ணியன்; எங்கள் குலம்புரி தவத்தால் வருகுரு சாமிக் கொண்டலுக் குரியதிந் நூலே, (குலம் - ஆசிரியக் குலம்) என்ற பாடலால் அவருக்கு அன்புப் படையலாக்கி மகிழ்ந்தேன், நான் காரைக்குடியில் பயிற்சிக் கல்லூரியில் பணியாற்றிய போ து ஓரிருவரைத் தவிர எல்லோருமே உற்சாகமாக வகுப்புகளைக் கையாண்டோம். அதிகமாக நூல்களைப் பயின்றோம்; அற்புதமாகக் கற்பித்தோம். எங்களையும் நாங்கள் படித்தபோது எங்கட்கு ஆசிரியர்களாக அமைந்தவர் களையும் ஒப்பிட்டுச் சீர்தூக்கி ஆராய்ந்தால் நாங்கள் தாம் சிறந்த முறையில் பணியாற்றினோம் என்பது வெள்ளிடை விலங்கலெனத் தெரிகின்றது. இதனை ஒருவித ஆன்ம பரிசோதனையாகக் கருதி எண்ணிப் பார்த்ததில் இந்த முடிவிற்கு வரமுடிந்தது. இதனை ஓர் உண்மையான ஒப்பீடு என்றே கருதலாம். எல்.டிக்குரிய பல்கலைக் கழகம் நடத்திய தேர்வுகளை நன்கு எழுதினேன். பேராசிரியர் குருசாமி ரெட்டியார் சற்பித்த கல்வி உளவியல் தேர்வினையும், பேராசிரியர் என். இரகுநாத அய்யங்கார் கற்பித்த கணிதம் பயிற்றும் முறைத் தேர்வையும், பேராசிரியர் சிங் அவர்கள் கற்பித்த நலவாழ்வுக் கல்விக்குரிய தேர்வையும் மிக நன்றாக எழுதியதை இன்று நினைவுகூர முடிகின்றது. கோடை