பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/517

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயிற்சிக் கல்லூரிப் பேராசிரியர்கள் 487 விடுமுறைக்காக (தேர்வுகள் நிறைவு பெற்ற தும்) சே லம் வழியாக மாமனார் வீட்டிற்குச் செல்லாமல் திருச்சி வழி யாகப் பொட்டணம் சென்றேன். சைதையில் இருக்கும் போதே துறையூரில் பெரு நிலக் கிழவரின் மக்கள் திரு. விசய வேங்கடாசல துரையு ம் திரு முத்து வேங்கடாசல துரையும் (இவர்கள் வழக்குரைஞர்கள்) சேர்ந்து ஓர் நடுநிலைப் பள்ளியைத் தொடங்குவதாகவும், அஃது உயர்நிலைப் பள்ளி யாக உயர்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கேள்வி யுற்று அதுபற்றி மேலும் தெரிந்து கொண்டு விண்ணப்பிப் பதற்கென்றே திருச்சி வழியாக வந்தேன். திருச்சியில் என் அரிய நண்பர் திரு P. அரங்கசாமி ரெட்டியார் பி.எல். பட்டம் பெற்று மிகு புகழ் வாய்ந்த திரு கணபதி அய்யர் என்ற வழக்குரைஞரிடம் வழக்குரைஞ ராக வருவதற்குரிய பயிற்சி பெற்று (Apprenticeship) வந்தார். திரு கணபதி அய்யர் வீடு ஆண்டார் தெருவி லிருந்தது. அவர் வீட்டிற்கு அருகில் எதிர் வரிசையில் • சேதுரத்தின அய்யர் தங்கும் விடுதி' யொன்றிருந்தது. அதில் தான் ?. அரங்கசாமி ரெட்டியார் தங்கியிருந்தார்' சென்னையை விட்டுப் புறப்படுவதற்கு முன்னர் திரு அரங்கசாமி ரெட்டியாருக்குக் கடிதம் எழுதியிருந்தேன். நகர் இருப்பூர்தி நிலையத்தில் (Town Station) இறங்கி அவர் அறையை வந்தடைந்தேன். குளியலையும் சிற்றுண்டியையும் முடித்துக் கொண்டு துறையூர் நடுநிலைப்பள்ளி தொடங்குவது குறித்து அனைத்து விவரங்களையும் திரு அரங்கசாமி ரெட்டியார் மூலம் நன்கு தெரிந்து கொண்டேன். இருவரும் கலந்து யோசித்ததில் தலைமையாசிரியர் பதவிக்கு விண்ணப்பம் அனுப்புவதென முடிவு செய்தோம். அழகான முறையில் விண்ணப்பம் தயார் செய்யப்பெற்றது. தட்டச்சு செய்யாமல் கையெழுத்திலேயே விண்ணப்பம் அனுப்புவதென முடிவுக்கு வந்தோம், அக்காலத்தில் என் தமிழ்க் கையெழுத்தும் ஆங்கிலக் கையெழுத்தும் முத்துக்