பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/518

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

488 நினைவுக் குமிழிகள்-1 கோத்தாற்போன்று மிக அழகாக இருக்கும். விண்ணப்பத்தை கையெழுத்திலேயே தயார் செய்தேன். 1) பி.எஸ்சி, பட்டச் சான்றிதழ் 2) சைதை கல்லூரியில் வழங்கப் பெற்ற சான்றிதழ், 3) மறைதிரு ஜெரோம் டி சைௗஸா, மறைதி 5 ஹாஸ், கே சி. சப்த ரிஷி ரெட்டியார், தி மு. நாராயணசாமி பிள்ளை , சர் டி, தேசிகாச்சாரி இவர்கள் வழங்கிய சான்றிதழ் களையும் அழகாகப் படியெடுத்தேன். ஏற்கெனவே (1939-40) ஆண்டில் வேலைதேடும் படலத்தில் அழகிய முறையில் விண்ணப்பம் அனுப்பும் முறைகளைப் பற்றி நன்கு அநுபவம் பெற்றிருந்தபடியால் விண்ணப்பம் தயாரிக்கும்முறையில் நன்கு qயிற்சி பெற்றிருந்தேன், அந்த அநுபவத்தைக் கொண்டு விண்ணப்பத்தைத் தயாரித்துச் சான்றிதழ் நகல்களை அத் துடன் அழகிய முறையில் இணைத்து திரு முத்து வேங்கடாசல் துரை அவர்களின் முகவரிக்குப் பதிவு அஞ்சல் மூ 7ம் அனுப்பி வைத்தேன் . இந்தவிண்ணப்பத்தைப் பார்த்த திரு அரங்கசாமி ரெட்டியார் என் திறமையைக்கண்டு மிக வியந்தார். துறையூரில் திரு. முத்து வேங்கடாசலதுரை, உயர் நிலைத் தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியர் திரு. T. S. இராசகோபால் அய்யர், அக்காலத்தில் முசிறி வட்டத்து ணைக் கல்வி ஆய்வாள ராக இருந்த திரு C, சிங்காரவேலு முதலியார் ஆகிய மூவரும் என் விண்ணப்பத்தைக்கண்டு மிகவும் மெச்சிப் போற்றியதைப் பின்னர் அறிந்தேன். என் தகுதி, திறமை முதலியவற்றைச் சான்றிதழ்கள் மூலம் அறிந்த திரு C. சிங்காரவேலு முதலியார் 'இவர் புதிதாகத் தொடங்கப் போகும் பள்ளிக்கு நல்ல நிலை முதலாக (Asset) இருப்பார்" என்று பரிந்துரைத்துப் புகழ்ந்ததாக என் ஆசிரியப் பெருந்தகை திரு T, S, இராசகோபால் அய்யர் மூலம் அறிந்து மகிழ்ந்தேன், இறையருளால் புதுப்பள்ளிக்குத் தலைமை யாசிரியர் பொறுப்பும் என்னை வந்தடைந்தது (1941" ஜூன் 1 தேதி முதல்).