பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/519

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமிழி -64 64. நினைவுச் சிதறல்கள் சென்ற 63.குமிழிகளும் நான் கல்விகற்ற நாள் தொடங்கிக் கல்லூரிக்கல்வி முடியும் வரை என்னைப் பற்றிச் சிறிது எடுத்துக் காட்டுவனவாக அமைந்தன. இந்த இருபத் தைந்து ஆண்டுக் காலத்தில் குறிப்பாகக் கல்லூரிப்படிப்புக் காலத்தில் -வேறு சில சிறு குமிழிசளும் எழுகின் றன. அவற்றுள் குறிப்பிடத்தக்க ஒரு சிலவற்றை ஈண்டுப்பதிவு செய்கின்றேன்-' நினைவுச் சிதறல்கள்' என்ற தலைப்பில். (1) நான் திருச்சி வாணப் பட்டறைத் தெருவில் இருந்த காலத்தில் என் அரிய நண்பர் திரு. வையாபுரியும் (தொழில் துறையில் பெரிய பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்று கரூரில் வாழ்ந்து வந்தவர்; இரண்டு மூன்றாண்டுகட்கு முன்னர் திரு நாடு அலங்கரித்தவர்) வேறு சில நண்பர்சளு ம் தேசியக் கல்லூரிக்கருகில் (ஆண்டார் தெருவிற்கு எதிரில்) உள்ள ஓர் ஓய்வு பெற்ற பேராசிரியர் வீட்டு மாடியிலிருந்த நான்கு அறைகளில் தங்கியிருந்தனர். பேராசிரியர் மக்கட்பேறு இல்லாதவர்; இவர் இல்லத்தில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் அனைவருமே ஒழுங்கு தவறாமல் படிக்கும் நன் மாணாக்கர்கள். சிலசமயம் மாலை நேரங்களில், அல்லது விடுமுறை நாட்களில் மாலை நேரங்களில் வேறு இடங்களில் தங்கியிருக்கும் மாணாக்கர்கள் வருவதுண்டு. அப்போது சற்று இரைச்சலும் கொம்மாளமும் இருக்கும். மாணவர் பருவத்தில் இவையெல்லாம் இருப்பது இயல்புதானே. தேர்வுக் கவலையைத் தவிர எந்தக் கவலையும் இல்லாதவர் களல்லவா? பல்லாண்டுகள் கல்லூரியில் கல்வி கற்பித்து ஓய்வு பெற்ற பேராசிரியருக்கு மாணவர்களின் உணர்வுகள் பற்றி அறியாதது வியப்பாக இருந்தது. அடிக்கடி அடக்கு முறைக் குரல் எழுப்புவார் - தொடக்கநிலைப் பள்ளி ஆசிரியர்கள்