பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/520

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

490 நினைவுக் குமிழிகள் - 1 சிறுவர்களை விரட்டுவது போல. இவர் போக்கையே விரும் பாதவர்கள் இவர்குரலுக்குச் செவிசாய்ப்பதில்லை மாறாகத் தமக்குள்ளே கிண்டலும் கேலியும் செய்வதுண்டு. ஆனால் பேராசிரியரிடம் மரியாதையுடன் தான் நடந்து கொள்வார் கள். இவர்கள் யாவரும் புனித சூசையப்பர் கல்லூரி மாணவர்கள். பேராசிரியர் இவர்கள் போக்கைப் பிடிக்காமல் அறை களைக் காலி செய்யுமாறு பதிவு அஞ்சல் மூலம் வக்கில் நோட்டீசு அனுப்பச் செய்தார். இது நடைபெற்றது பிப்பிரவரி (1939) இறுதியில் மாணவர்கள் என் ன செய்வார் கள்? எங்கும் தங்கும் அறைகள் கிடைக்கா. அதுவும் கல்லூரிக்கு அருகில் எப்படிக் கிடைக்கும்? மாணவர்கட்கு ஒரே கவலையாகிவிட்டது. வழக்கமாக அவர்கள் அறைக்குப் போகும் என்னிடம் நிலைமையைத் தெரிவித்தார் வையாபுரி, மறுநாள் காலையில் நானும் வையாபுரியும் நான்கு நோட்டீசுகளையும் எடுத்துக் கொண்டு பாதிரிமார் மாளிகை சென்று முதல்வர் ஜெரோம் டி. சௌஸா அவர்களைச் சந்தித்து நிலையை விளக்கினோம். தேர்வுகள் நெருங்கிக் கொண்டிருந்த சமயம் எங்கட்கு இத்தொல்லைகள் தீரு வதைப்பற்றி வருத்தத்துடன் தெரிவித்தோம்; எப்படி யாவது எங்களைக் காப்பாற்றுமாறு வேண்டினோம், மாணவர்கள் நலனையே குறிக்கோளாகக் கொண் டிருந்த முதல்வர், அஞ்ச வேண்டா , நம் கல்லூரி வக்கீல் பி. எஸ். கிருஷ்ணமூர்த்தி அய்யரிடம் (ஆண்டார் தெருவில் தான் இவர் குடியிருந்தார்) என் கடிதத்துடன் இந்த நோட்டீசுகளைச் சேர்ப்பியுங்கள். அவர் பதில் நோட்டீசு தந்துவிடுவார். எல்லாம் சரியாய் விடும். நீங்கள் கவலை யின்றித் தேர்வுக்குப் படியுங்கள். ஆசி என்று வாழ்த்தி அனுப்பினார். ஒன்றிரண்டு நாட்களில் அஞ்சல் சேவகன்