பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/521

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நினைவுச் சிதறல்கள் 491 பதிவு அஞ்சல் கடிதம் ஒன்றை பேராசிரியரிடம் தந்ததைப் பார்த்ததாக வையாபுரி என்னிடம் சொன்னார். அன்று முதல் பேராசியர் முகத்தில் ஈஆடவில்லை. பெட்டி. பாம்பு போல் அடங்கிவிட்டார். நாங்கள் நன்கு படிக்கின்றோம் என்றார் வையாபுரி, மாணவர் முன்னேற்றத்திற்காகப் பாடுபடும் ஜெரோம் டி சௌஸாவைப் போல் ஒரு முதல் வரைக் காண்டல் அரிது. (2) நான் சூசையப்பர் கல்லூரியில் படித்த காலத்தில் தேசியக் கல்லூரியில் முதல்வராக இருந்தவர் மிகுபுகழ் பெற்ற பேராசிரியர் சாரநாதன் அவர்கள். இவரும் மாணாக் கர்பால் மிதமிஞ்சிய அன்பும் அக்கறையும் கொண்!-வர். ஆங்கிலம் கற்பிப்பதில், ஷேக்ஸ்பியர் நாடகங்களைக் கற்பிப் பதில் வல்லவர் என்று மாணவர்கள் பேசிக் கொள்வதைக் கேட்டதுண்டு. இவர் தேசபக்தர்; கதர் ஆடை தவிர வேறு உடைகளை அணிவதில்லை. காங்கிரஸ் கட்சியால் பற்றுடைய வராக இருப்பினும் பிற கட்சிகளின் கொள்கைகளைக் கேட்டு மகிழும் பரந்த, திறந்த மனமுடையவர். ஒரு சமயம் தோழர் ப. ஜீவானந்தத்தையும் திருமதி நீலாவதி இராமசுப்பிரமணியத்தையும், கல்லூரியில் வந்து பேசுமாறு அழைத்திருந்தார் பேராசிரியர் சாரநாதன். இவர் கள் இருவரும், அக்காலத்தில் தந்தை பெரியார் அவர்களின் கொள்கைப் பிடிப்புடையவர்கள். இவர்கள் நகரமண்டபம் (Town Hall) அருகிலுள்ள மைதானத்தில் அடிக்கடிப் பேசுவ துண்டு. அப்பொழுது காசியப்பா ராவுத்தர் ஸ்டோரில் தங்கி யிருந்த நான் இவர்கள் பேச்சை அடிக்கடிக் கேட்பதுண்டு. கல்லூரி மரபுக்கு ஒவ்வாத முறையில் பேசும் இவர்கள் பேச்சைக் கேட்க நான் மிக்க ஆவலுடன் சென்றிருந்தேன். அக்காலத்தில் ஐரோப்பா போர்மேகம் சூழ்ந்திருந்தது. இத்தாலி நாட்டைச் சார்ந்த முஸோலினியின் அச்சுறுத்தல்