பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/522

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

492 நினைவுக் குமிழிகள்-1 செய்தித்தாள்கள் வழியாக வெளிவந்து கொண்டிருந்தது. தோழர் ப ஜீவாநந்தம் தலைமையில் நீலாவதி இராம சுப்பிர மணியம் பேசியதாக நினைவு. இருவரும் அய்யர்மாருக்குச் சிறிதும் ஒவ்வாத சுயமரியாதைக் கட்சிக் கொள்கைகளை அவிழ்த்துவிட்டுக் கொண்டிந்தனர். ஆனால் கல்லூரி கௌரவத்திற்கு முற்றிலும் பொருந்தும் படியாக உயர்ந்த பண்பாட்டுடன் தான் பேசிவந்தனர். பேராசிரியர் சார நாதன் உட்பட அய்யர் கோட்டையான தேசியக் கல்லூரியில் பணியாற்றும் அய்யர்மார்களில் பெரும்பாலோர் வந்திருந் தனர். அனைவருமே இருவர் பேச்சுகளைச் சுவைத்து மகிழ்ந்தனர்; பேச்சின் முக்கியமான கட்டங்களில் கையொலி யும் எழுப்பி மகிழ்ந்தனர். தோழர், ப. ஜீவாநந்தம் பேசும் போது ' இத்தாலி நாட்டு மக்களின் மார்பைப் பிளந்து பார்த்தால், “இத்தாலி சுதந்திரம்' என்று பொறிக்கப் பெற்றிருப்பதைக் காணலாம்; ஆனால் நம் தென்னிந்திய அய்யர்மார்களின் குப்பாயத்தை (சட்டை)யை நீக்கினாலே 'டவாலி' (பூணூல்) திகழ்வதைக் காணலாம்" என்று ஒருபோடு போட்டார் 'இப்படிப் பேசி விட்டாரே!' என்று என் நெஞ்சு துணுக்குற்றது. ஆனால் போராசிரியர் சாரநாதன் சிரிப் பொலியை எழுப்பிக் கொண்டு கையொலியையும் பலமுறை எழுப்பி மகிழ்ந்ததைக் கண்டு வியப்புற்றேன். “பண்புடையார் பட்டுண்டு உலகம்' என்ற பொய்யாமொழிக்கு இலக்கிய மாகத் திகழ்ந்ததையும் கண்டு மகிழ்ந்தேன். அக்காலத்தில் இப்படிப் பரந்த உள்ளமுடைய பிராமணரைக் காண்டல் அரிது . (3) சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி மாணவர் விடுதியில் நான் தங்கியிருந்தபோது திரு கா. அப்பாதுரைப் பிள்ளை அவர்களும் தங்கியிருந்தார்; கல்லூரியில் என்னுடன் 1. குறள் 996.