பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/523

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நினைவுச் சிதறல்கள் 493 பயிற்சி பெற்றார். அக்காலத்தில் ஷேக்ஸ் பிரியர் நாடகக் கதைகளை நற்றமிழில் எழுதிச் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்திற்குத் தந்து கொண்டிருந்தார். கழகம் பயிற்சிக் கல்லூரியில் படிப்பதற்கான செலவு முழுவதையும் ஏற்றுக் கொள்ள ஒப்புதல் அளித்ததால் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி யில் சேர்ந் தார். கையில் செலவுக்குப் பணமின்றி அடிக்கடிச் சிரமப்பட்டதைக் கண்டேன். கழகத்திலிருந்து உரிய காலத் தில் பணம் தராததால் இந்தச் சிரமம் அவருக்கு இருந்து வந்ததி, (1,பயிற்சிக் கல்லூரியில் எல்லோரும் விளையாட வேண்டும், உடற்பயிற்சி யும் பெறவேண்டும் என்ற கட்டாயம் இருந்தது, உடல் கல்வி பற்றிய எழுத்துமுறைத் தேர்வும் இருந்து வந்தது. சல்லூரி மாணவர்களில் 23 வயதிலிருந்து 48 வயது வரைச் கும் உட்பட்ட மாணவர்கள் இருந்து வந்தனர் டார்வின் படி வளர்ச்சிக் கொள்கையை எடுத்துக் காட்டுவது போல் மாண வர் கூட்டம் திகழ்ந்தது! பருத்த உடலும் குள்ள மான உருவமும் சுமார் 40 அகவையை எட்டும் திரு அப்பாத்துரையாரும் விளையாடினார், ஒரு சமயம் எறிபந்து விளையாட்டில் (Volley ball) ஓடியாடி விளையாடின பொழுது தவறி விழுந்தார்; முழங்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. சுமார் இருபது நாட்கள் மருத்துவமனையில் இருக்கும் நிலை ஏற்பட்டது. உரையாடலில் வல்லவ ராதலால் (தமிழ், ஆங்கிலம், இந்தி) எல்லோர் கவனத்தை யும் ஈர்த்தார். மரக்கறி உணவுப் பகுதியில் சுமார் 45 மாணவர்கள் இருந்தனர். இப்பகுதியில் தான் அவர் உணவு கொண் டிருந்தார். மருத்துவமனையிலிருந்து திரும்பியதும் அவருக்கு இலவச உணவு வழங்கும் ஒரு திட்டத்தை மாணவர்கள் கூட்டத்தில் எடுத்துக் கூறினேன். அவர் நிலையையும்