பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 நினைவு குமிழிகள்-2

பள்ளி நிர்வாகக் குழு அமைப்பது பற்றித் தெரிந்து கொள்ள நினைத்து ஈரோட்டிற்குப் பயனச் சீட்டு வாங்கினேன். பிற்பகல் இரண்டரை மணிக்கு வண்டி ஈரோடு நிலையத்தை அடைந்தது. நெரிசல் அதிகமாக இருந்தது. அழுக்கு உடை கள் வைத்திருந்த கித் தான்பை நழுவி விட்டது. கவலையுடன் கைப்பெட்டியை எடுத்துக்கொண்டு இரயில் மேடையில் நடந்து வந்தபோது ஒரு மூதாட்டி என் பையைக் கட்கத்தில் வைத்துக் கொண்டு நடந்து செல்வதைக் கண்டு அதை வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டேன். குற்றமுள்ள நெஞ்சினள் ஆதலால் வாய் பேசாது மெளனமானாள்.

ஒரு குதிரைவண்டியை அமர்த்திக்கொண்டு நேராகத் திரு பெருமாள் முதலியார் பணியாற்றும் பள்ளியை வந்தடைந் தேன். அது கோடை விடுமுறைக் காலம், தலைமையாசிரி யருக்கு விடுமுறை ஏது? எப்படியும் சந்தித்து விடலாம் என்று தான் வந்தேன். தேடப்போன மருந்து காலில் தட்டுப் பட்டிது போல் அவரைப் பள்ளியிலேயே காண முடிந்தது, நான் அவரை முன் பின் பார்த்ததில்லை. நானே என்னை அறிமுகப் படுத்திக்கொண்டு என் கதையை விரித்துக் கூறி பள்ளிநிர்வாகம் அமைத்துள்ள நிர்வாக குழுபற்றிய விவரம் கேட்டேன். அந்தப் பள்ளியில் 'தாளாளர் அலுவலகம்' என்று தனியாக ஒன்று இருந்தது. ஒர் எழுத்தர்-தட்டச்சுப் பொறியாளர் எப்போதும் இருப்பார். திரு.முதலியார் அவரை வரவழைத்து நகலொன்று தட்டச்சு செய்யுமாறு பணித்தார்; அவர் தாளாளர் அநுமதியின்றித் தர முடியாது என்று மறுத்து விட்டார். அவர் அந்தண இளைஞர். இப்போது தான் அப்பள்ளியில் தலைமையாசிரியரின் செல்வாக்கை ஒரு வினாடியில் ஊகித்துக்கொண்டேன். முதலியாரும் இது தான் ஐயா, இங்குள்ள நிலை. எவ்வளவு மானக்கேடாக நான் காலத்தைத் தள்ளி வருகிறேன் என்பது உங்கட்குப் புரியும்" என்றார். சிற்றுண்டி காஃபி அருந்தச் சொல்லி விடை