பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 நினைவு குமிழிகள்-2

அவள் மகனும் எருமைப்பட்டியில் தந்தை-தாய் இல்லத்தில் உள்ளார்கள். ஏழாண்டுகட்குமேல் ம க்க ட் பே றி ன் றி மைந்தன் பிறந்தும் அவளைத் தள்ளி வைத்ததன் காரணம் மட்டிலும் அவரால் ஊகித்தும் அறியமுடியாது. தீயொழுக் கம் இல்லை என்பதைக் கணவன் உட்பட உலகம் நன்கு அறியும். அந்தப் பெண் பெற்றோர் சொற்கேட்டு மதி கெட்டு நடந்து கொண்டதனால் அதன் பலனை அநுபவிக் கின்றாள் என்பது மட்டிலும் அவருக்குத் தெரிந்திருக்கும்.

தானே புரிவினையாற் சாரும் இருபயனும் தானே அநுபவித்தல் தப்பாது-தான் நூறு கோடி கற்பஞ் சென்றாலும் கோதையே செய்தவினை நாடிநிற்கும் என்றார் நயந்து.'

(கற்பம் - ஊழி, கோதை - பெண்)

இதனால் தன் மகளைக் கணவனின் மனங்கோணாது நடந்து

கொள்ளுமாறு அறிவுறுத்தி இருக்கவேண்டும். தந்தை எப்படியிருந்தாலும் பெண்ணைப்பற்றி ஒரு குறையும்

சொல்லுவதற்கில்லை. இராமசாமி ரெட்டியாரும் தன்

முதல் மனைவியின் கதையைச் சொல்லி இரண்டாம்

மனைவியை எச்சரித்திருக்க வேண்டும். -

இராமசாமி ரெட்டியாருக்கு தங்கையொருத்தி உண்டு. அவள் கணவன் (நான்) கற்றுத் துறைபோய வித்தகன் என்று புகழுடன் ஓர் உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியராகப் பணியாற்றுகின்றார், சொற்பப் பூர்வீகச் சொத்துடைய வரேயன்றி செல்வச் சிறப்புடையவரல்லர். திருமணம்ஆகி ஏழாண்டுகள் கடந்தும் அத்தம்பதிகட்கு மட்கட்பேறு வாய்க்கவில்லை. . . .

1, நீதிவெண்பா - 47.