பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் மைத்துனரின் குடும்ப நிகழ்ச்சிகள் 83

கூடாது. உங்கள் மைத்துனரிடம் தனிமையாக வற்புறுத்திச் சொல்லுங்கள்” என்று சொன்னவை நினைவிலுள்ளன. நான் அவர்களிடம் எனக்கு இவற்றைச் சொல்ல வயது போதாது, மாமனாரைப் பற்றி மிகப் பெருமையுடன் பேசி வருகின்றார். இதுபற்றி ஏதாவது பேசினால் என் மரியாதை போய்விடும்; விரோதமும் நேரிடலாம். ஆகவே எதுவும் பேசேன். நீங்களே பட்டும் படாமல் ஏதாவது குறிப்பாகச் சொல்லி வையுங்கள்' என்று சொல்லிவிட்டேன். அவர் களும் அதற்கு ஒப்புக் கொண்டார்கள். சொன்னார்களோ, சொல்லவில்லையோ என்பதைப் பின்னர் யான் ஆராய வில்லை. சொன்னாலும் அது செவிடன் காதில் ஊதிய சங்கொலி போலாகும் என்பதை மட்டிலும் நான் உறுதி கொண்டிருந்தேன். காரணம், நிலைமை அப்படியிருந்தது.

திரும்பவும் பொட்டணம் சென்று ஒருநாள் தங்கிவிட்டுத் துறையூர் திரும்பி விட்டோம். பல்வேறு செய்திகளைக் கேள்வியுற்றபிறகு அந்தச் சம்பந்தம் எங்கட்கு மனநிறைவு தரவில்லை. ஏதோ அழிவுகாலத்திற்கு விதை போட்டா யிற்று என்பது மட்டிலும் என் மனத்திற்குத் தெளிவாகத் தெரிந்தது. -

. . . குமிழி-76 12. சுப்பிரமணியம் மருமகனைப்பற்றி

- அறிந்து கொண்டவை

κάχ :******५{ w५*:X****** ,:. ४:**४.'!***

پيموهوب، مد. بعيوبيين

இராமசாமி ரெட்டியார் தன் மருமகனுக்கு முதல் மனைவி உண்டு; அவள்மூலம் ஒரு மகன் உள்ளான். மன வேறுபாட்டால் அவளைத் தள்ளி வைத்துள்ளார். இனி அவளை ஒருக்காலும் சேர்த்துக் கொள்ளார். அவளும்