பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சதியின் விசுவருபம் - 105

இவருக்குப் பெண் குழந்தைஇல்லை. அண்ண்னும் தம்பியும் படிக்கவில்லை; கையெழுத்து மட்டிலும் போடக் கூடிய வர்கள்.

சின்னகுண்டு என்பவருக்கு இரண்டு பெண்குழந்தைகள்; இவருக்கு ஆண் வாரிசு இல்லை. புன் செய்நிலம் அதிகமாக வும், நன்செய் நிலம் குறைவாகவும் இருந்தது, இவர் நிலத்தை அதிகமாகக் கவனிப்பதில்லை; இவருடைய துணைவியார் அனைத்தையும் கவனித்துக் கொள்வார். இவர் ஊர் விவகாரம்-நீதிமன்ற வழக்குகள்-இவற்றில் கவனம் செலுத்துவார். படிப்பு அதிகம் இல்லாவிடினும் நீதி மன்றவழக்குகள், சட்ட நுணுக்கங்கள் இவற்றைக் கேள்வி வாயிலாகவே நன்கு அறிந்து கொண்டிருந்தார். இவரிடம் பேச்சு கொடுத்தால் போதும். நீதிமன்றச் செய்திகளை உதிர்ப்பார். இவரைக் கண்டாலே ஊர்மக்களுக்கு அச்சம். எதிலாவது மாட்ட வைத்துவிடுவார் என்று பேசிக் கொள் வதை நான் கேள்விப் பட்டதுண்டு. ஆனால் நான் சிறிது பழகியவரை நல்லவராகவே காணப்பட்டார். வீண்வம் பு கட்குப் போவதில்லை. யாராவது சிக்கலில் மாட்டிக் கொண்டால் அவர்கள் நீதிமன்றங்கட்குப் போக உதவுவதற். கும் வழக்குரைஞர்களை ஏற்படுத்தி வழக்குகளை நடத்துவ தற்கும் உதவுவார். இதனால் அவருக்கு நாமக்கல், சேலம் போன்ற இடங்கட்குப் பிறருக்கு உதவும் பொருட்டு அடிக்கடிபயணங்கள் இருக்கும். இவற்றைக் கொண்டே பாமர மக்கள் இவரைக்கண்டு அஞ்சுவார்கள்.

என் மாமியார் சின்ன குண்டன் வீட்டில் தங்கியிருந்த தைக் கண்டு என் மைத்துனர், மாமனார் மிகவும் அஞ்சினார் கள். ஏதாவது வழக்கில் தங்களை இழுக்கக் கூடும். என்று அஞ்சினார்கள். சுப்பிரமணியத்தைக் கலந்து இதற்கு மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று யோசித்து வந்தார்கள்.