பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 நினைவுக் குமிழிகள்-2

களையும் உன்னிப்பாகக் கவனித்தனர்; கூர்ந்து நோக்கினர். இதனால் எச் செயல் இரகசியமாக நடைபெற்றாலும் ஒன்றிரண்டு நாட்களில் அஃது அம்பலமாகி விடும். சார் பதிவாளர் என் மைத்துனர் இல்லத்திற்கு வந்ததும், இல்லத்தில் இரண்டு ஆவணங்கள் பதிவான விவரமும் ஒன்றிரண்டு நாட்களில் எல்லோருக்கும் தெரிந்து விட்டன.

என் மாமியாருக்கு இப்போதுதான் விவரம் தெரிந்தது. தன்னைப் பிச்சைக்காரியின் நிலைக்குக் கபடமாகக் கொண்டு வந்து விட்டார்களே என்ற வருத்தமும் கவலையும் மனத்தை வாட்டின. ஏதோ கலாட்டா செய்து விட்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டார்கள். அந்த ஊரில் தூரத்து உறவாக இருக்கும் இராமசாமி ரெட்டியார் வீட்டில் தங்கியிருந்தார்கள். இராமசாமி ரெட்டியார் என்றால் பெரும்பாலோருக்குத் தெரியாது. இவரோடு பிறந்தவர் முத்தவர்-முத்துரெட்டியார். இருவரும் உடல் பருமனுடன் சற்றுக் குட்டையாகவும் இருந்தமையால் ஊர்ப் பெருமக்கள் அவர்களைக் குண்டுத் தம்புகள் என்று குறிப் பிடுவது வழக்கம். நேரில் காணும் போது பெரியகுண்டு’ "சின்ன குண்டு என்று வழங்குவர். படர்க்கையில் பேசும் போது பெரிய குண்டன், சின்ன குண்டன் என்றே குறிப்பிடு வார்கள்,

மூத்தவர் மூன்று கல்தொலைவிலுள்ள தோட்டமே கதி என்று பெரும்பாலும் அங்கேயே கிடப்பார்; ஊர்ப்பக்கம் அவரை அடிக்கடிக் காண முடியாது. நல்ல,உழைப்பாளி: பெரியபண்ணை, நல்ல வருமானமும் இருந்தது. நான் பொட்டணத்தில் இருந்தபோது அவருடைய, மக்கள் நால்வரில் இருவர் வயல் வேலைக்கு உதவும் வகையில் வளர்ந்திருந்தனர். ஏனைய இருவர் சிறு பிள்ளைகள் திண்ணைப் புள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்தனர்.