பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சதியின் விசுவரூபம் 103

யாரொருவர் யோசனையுமின்றிச் செயற்படுவதுபோல் செயற்படுவார். மா ம ன ா ைர த் தான் யோசனைக்கு அழைப்பதுபோல் செயல் நடைபெறும், செகப்பிரியரின் ஒதெல்லோவின் நாடகத்தில் வரும் இயாகோ என்ற போக்கிரி (Villain) கூட சுப்பிரமணியத்திடம் பிச்சை வாங்க வேண்டும்.

(1) ஒர் இறுதி விருப்பம் ஆவணம் (will) பற்றிக் குறிப் பிட்டேன் அல்லவா? அந்த ஆவணத்தைத் தள்ளுபடி செய்து சொத்து முழுவதையும் தானசாசனமாக, (Gift deed) எழுதிக் கொண்டார் என்மைத்துனர்.

(2) தன் தாயாருக்குச் சொத்தை அநுபவிக்கும் உரிமை இருந்தாலும் இருக்கலாம்; அந்த அம்மாள் யார் பேச்சை யாவது கேட்டுக்கொண்டு வழக்குத் தொடுத்தாலும் தொடுக்கலாம். இதை முன்னதாகவே நன்றாகச் சிந்தித்து வருமானத்தைத் தம் மகனுக்கு விட்டுக் கொடுக்கும் ஆவணம் (Surrender deed) ஒன்றை எழுதி வாங்கிக் கொண்டார்.

பாட்டிக்கும் எழுதிக் கொடுத்தது என்ன என்பது தெரியாது: சொன்னாலும் புரிந்து கொள்ளக் கூடிய ஆற்றல் இல்லை; மனம் மிகவும் தளர்ந்து விட்டது. தன் தாயாருக் கும் எதை எதையோ மனத்தை மாற்றி கைரேகை பெற்றுக் கொண்டார். சார்பதிவாளர் (Sub-Registrat) வீட்டிற்கே வந்து பதிவு செய்ததால், எல்லாம் எளிதாக முடிந்தன.

ஊரில் விவரம் அறிந்த ஒரு சிலர் மட்டிலும் சுப்பிர மணியம் வீட்டில் சம்பந்தம் ஏற்பட்ட பிறகு என் மைத்துன ரின் நடவடிக்கைகள் மாறிப் போவதைக் கண்டனர். சுப்பிரமணியத்தின் உறவு குடும்பத்தைக் கெடுக்கும் கோடறிக்காம்பு என்பதைத் தெளிவாகவே அறிந்திருந்தனர். ஆதலால் குடும்பத்தில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்ச்சி