பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்காம் படிவம்-சென்னைப் பயணம் X- 1CŞ

AH SALLADSGSS0SSSMSSS0SSSMSSAAAAS SAAAA AAAAA

SAMMAAAS000S AAS00 SAAAAe 00gggMSAAAAAAAS

செல்வ விநாயகர் கோவில் தெரு, மயிலாப்பூர்) தங்கியிருந் தேன். திரு வி.எஸ். இராமச்சந்திர அய்யர் திருவல்லிக்கேணி பெல்ஸ் சாலையிலுள்ள ஒரு வீட்டுமாடியிலுள்ள பகுதியில் தங்கி இருந்தார். அப்போது உணவு பங்கீடு நடைமுறையில் இருந்தது. உணவு விடுதியில் ஏதோ நல்ல முறையில் சிற்றுண்டி கிடைத்தது. உணவு சரியாக இல்லை. நான் நாடோறும் கல்வித்துறை அலுவலகத்திற்குச் செல்ல வேண்டியவனாக இருந்தபடியால் அங்குள்ள உணவு விடுதி யில் சிற்றுண்டி மட்டிலும்தான் கிடைத்தது. ஒருநாள் இராமச் சந்திர அய்யர் என்னிடம், மிஸ்டர் ரெட்டியார். சென்னை யில் இருக்கும்வரை என் வீட்டிலே தங்கலாம்; உணவும் இங்கேயே கொள்ளலாம். வெளியில் உணவு கொண்டால் உங்கள் உடல்நிலை கெடும்” என்றுகூறி தன் வீட்டிலேயே என்னைத் தங்குமாறு பணிக்க நானும் மயிலாப்பூரிலிருந்து திருவல்லிக்கேணிக்கு வந்துவிட்டேன்.

காலையில் ஆறு மணிக்கு காஃபி தருவார். அதை அருந்தியவுடன் வெளிக்கிளம்பிவிடுவேன். அரைமணி நேரத் தில் ஒருரூபாய்க்குக் காய்கறிகள் வாங்கிவருவேன். இப்போது (ஆகஸ்டு-1989) பத்து ரூபாய்க்கு வாங்கினாலும் அவ்வளவு காய்கறிகள் இரா. நான் வாங்கிவரும் காய்கறிகள் இரண்டு நாட்களுக்குப் போதுமானவைகளாக இருக்கும். நான் தங்கி யிருந்த 15 நாட்களும் இப்படியே காய்கறிகள் வாங்கிவரும் பணியை மேற்கொண்டிருந்தேன். என்னைத் தன் மகன் போல் பாவித்து அன்புடன் கவனித்துக் கொண்டார். அவரே ஆடைகளைத் துவைத்து உலரவைப்பார்; பிறகு பூசையில் இறங்கிவிடுவார். நான் காய்கறிகளுடன் வரும்போது பூசை யில் இருப்பார். நானும் நீராட்டத்தை முடித்துக்கொண்டு அலுவலகம் செல்லத் தயாராகிவிடுவேன். சிறந்த வைதிகரா யிருந்தாலும் என்னைத் தன் அருகிலிருந்து உணவு கொள்ளு மாறு செய்வார். இலை எடுப்பதற்கும் அனுமதியார். இதைத்