பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 - - நினைவுக் குமிழிகள்-2

கின்றேன்." என்று கேட்டுக் கொண்டேன். அவரும் உரிய பகுதியின் தலைவரை எனக்கு அறிமுகம் செய்து ஆணையை என்னிடம் தருமாறு வேண்டினார். உரிய பகுதியின் தலை வரும் இதற்கு ஒருவாரம் தவணை சொன்னார்.

இதற்கிடையில் கே. இராமச்சந்திர அய்யர் தந்த பரிந்துரைக் கடிதத்துடன் வி. எஸ். இராமச்சந்திர அய்யரைச் சந்தித்து அவரிடம் நல்ல உறவு கொண்டேன். மேற்குறிப் பிட்ட மறுப்பு-ஆணை என் கைக்குக் கிடைப்பதற்கும் உதவி னார். அந்தப் பகுதியில் அஞ்சலில் கடிதம் அனுப்புபவ9ை அழைத்து மேற்படி ஆணையைத் தன்னிடம் தருமாறு கேட்டுக் கொண்டார். அங்ங்னமே அங்கும் அந்த ஆணையை இவரிடம் தர நான் அதைக் கையெழுத்திட்டுப் பெற்றுக் கொண்டேன். இராமச்சந்திர அய்யர் இந்தப் பிரச்சினையை சமாளிக்கும் முறையைப் பற்றிச் சில நாட்கள் சிந்திக்கலா னாா. r -

வி. எஸ். இராமச்சந்திர அய்யர் மிக நல்லவர். யாருக்கும் உதவுபவர். என் கடன் பணிசெய்துகிட்ப்பதே என்ற ஆன்றோர் வாக்குக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்ந்தனர். நான் அவரிடம் பதினைந்து நாட்கள் மிக நெருக்கமாகப் பழகினபோது பல நல்ல அருங்குணங்களை எல்லாம் அறிந்து கொள்ள வாய்ப்புகிடைத்தது. இந்தப் பதினைந்து நாட்களில் மாநிலங்கள் பல இடங்களிவிருந்து பல தலைமைபாசிரியர்கள் வந்து திரு. இராமச்சந்திர அய்யரைச் சந்தித்துத் தங்கள் சங்கடங்களைத் தீர்த்துக் கொண்டதையும் வேறு பல ஆக்க வேலைபற்றிய யோசனைகளை பெற்றுக்கொண்டு செல் வதையும் கண்டபிறகு இராமச்சந்திர அய்யரின் சிறந்த தொண்டுள்ளத்தை என்னால் அறிந்து கொள்ள முடிந்தது. அவர்மீது நான் கொண்டிருந்த மதிப்பும் உயர்ந்தது.

நான் சென்னையிலிருந்தபோது பன்மொழிப் புலவர் வுே வுேங்கட்ராஜூலு ரெட்டியார் இல்லத்தில் (13. வடகூர்