பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுப்பிரமணியத்தின் திருவிளையாடல்கள் 123

யாக வந்த அரங்கசாமி ரெட்டியாரிடம் உங்கள் எதிரில் தந்து விடுகின்றேன். ஊரை அடைந்ததும் அவரிடமிருந்து பெற்றுக் கொள்ளுகின்றேன்” என்று சொல்லி அவரிடம் கொடுத்தார். இந்தப் பணத்தைக் கொண்டு தன் மகன் மீது வழக்குத் தொடுத்து சர்ரண்டர் பத்திரத்தைச் செல்லாமல் அடித்து விடலாம் என்பது என் மாமியாரின் திட்டம்;குண்டு தம்பு யோசனை இதுவாக இருக்கலாம். இந்தப்பணத்தையும் தான் பிடுங்கிக் கொண்டால் அம்மா ஆட்டம் அடங்கிவிடும் என்பது என் மைத்துனரின் திட்டம். ஆனால் இறைவனது திட்டம் வேறு விதமாக இருந்தது. நாம் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்குமல்லவா?

எல்லோரும் சேந்தமங்கலத்திலிருந்து (சார்பதிவாளர் அலுவலகம் உள்ள ஊர்) வண்டியில் ப்ொட்டணம் திரும்பும் போது, அரங்கசாமி ரெட்டியார் என் மாமியாரை நோக்கி. "அக்கா, எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கிறது. நான் அதைப் பார்த்துக் கொண்டு பின்னர் வருகின்றேன். நீங்கள் வண்டியில் போங்கள்' என்று கூறி பின் தங்கி விட்டார். தங்கினவர் இந்தப் பணம் போக வேண்டிய இடம் துறையூர்' என்று நினைத்துக் கொண்டு சேந்தமங்கலத்தி விருந்து பேருந்து ஏறி நாமக்கல் வந்து, நாமக்கல்விலிருந்து மற்றொரு பேருந்து ஏறி இரவு ஏழரை மணிக்குத் துறையூர் வந்து பணத்தை விவரம் சொல்லி என் மனைவியிடம் சேர்ப் பித்தார். சீதனத்தில் ஒரு பகுதி இப்படி எங்களை வந்தடைந்தது.

(2) சின்னகுண்டுத் தம்புவுக்கு பொட்டணத்தில் ஊருக் குக் கிழக்கே நஞ்செய் நிலம் இருந்தது. அதில் இரண்டு ஏக்கரில் குச்சி வள்ளிக் கிழங்கு சாகுபடி செய்திருந்தார். நூறடிக்குக்கு மேல் ஆழத்திலிருந்து கபிலையைக் கொண்டு தான் நீர் இறைத்துப் பாய்ச்சவேண்டும். கிழங்கு முக்கால் தரத்தில் விளைந்திருந்தது. "இந்தக் குண்டன் தானே தன் அன்னையாருக்குப் புகலிடம் தருகின்றான், இவனுக்குப்