பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 - நினைவுக் குமிழிகள்-2

பாடம் கற்பிக்கவேண்டும்' என்று சுப்பிரமணியம் என் மைத்துனருக்கு உபதேசம் செய்ய, அதற்கு என் மைத்துனரும் ஒப்புக்கொண்டார். சிவநாய்க்கன் பட்டியிலிருந்து (சுப்பிர மணியம் ஊர்) இரவோடு இரவாக இருபத்தைந்து கூலியாட் களைக் கொண்டு வந்து குண்டு தம்பு வயலில் நீர் பாய்ச்சப் பெற்று முக்கால் தரத்தில் விளைந்துள்ள குச்சி வள்ளிக் குச்சி களைப் பிடுங்கி எறிந்துவிட்டனர். மறுநாள் காலையில் குண்டுத்தம்பு வந்து நிலத்தைப் பார்வை இடும்போது இக் கோரக் காட்சியைக் கண்டார்; துடிதுடித்துப் போனார். ஊர்ப் பெருமக்களைக் கொண்டு வந்து காட்டினார். என் மாமியாரையும் இட்டுக் கொண்டுவந்து காட்டினார். பாடு படும் விவசாயிதான்-உழைப்பாளிதான்-இக்கொடுமையை நன்கு உணரமுடியும். கையில் நாலாயிரம் ரூபாய் வைத்தி ருந்து அதைத் தவறவிட்டவர் மனம் நோவதைவிட இக் கோரக் காட்சியைக் காண்பவர்கள் யாவரும் ஆயிரம் மடங்கு மனம் நொந்து போயிருக்கவேண்டும். இதைச் செய்தவர் யார் என்பதை மெய்ப்பிக்க முடியாவிடினும் இது 'சுப்பிர மணியம்- இராமசாமி இருவரின் சதி” என்பதை எல்லோரும் உணர்ந்தனர். உணர்ந்து என்ன பயன்? படு பாவிப்பயல்கள்! என்று சபித்தனர்; அவ்வளவுதான்!

இதனைக் கண்டு கண்கலங்கிய என் மாமியார் இல்லம் அடைந்ததும் தன் கழுத்திலிருந்த பதிநான்கு சவரன் எடை யுள்ள நான்கு வடம் சங்கிலியைக் கழற்றிக் குண்டுத் தம்பு விடம் தந்து, இந்த சங்கிலியை விற்று, வழக்குத்தொடுத்து என் மகனையும் சுப்பிரமணியத்தையும் கம்பி எண்ண வை' என்று பொங்கி எழும் சினத்துடன் கூறித் தந்தார். சின்ன குண்டுத் தம்பு அதை விற்பதற்காக குறுக்கு வழியில் நாமக் கல்லுக்கு நடந்தார். ( 6 கல் தொலைவு-பேருந்து வசதி இல்லை; அவருக்கு மிதிவண்டியும் ஏறத்தெரியாது). இச் செய்தி கோடை காலத்துக் காற்றில் தீ பரவுவது போல்