பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வக்கீல் அரங்கசாமி ரெட்டியார் 157

வெளியே நட என்று முனிசிப்பு சொன்ன நாளிலிருந்து சுமார் ஓராண்டு அரங்கசாமி ரெட்டியார் துறையூர் நீதிமன்றத்திற்குப் போவதைத் தவிர்த்தார், உயர்நீதி மன்றம் நீதிவழங்க மெத்தனமாக இருந்ததால், அரங்கசாமி ரெட்டியார் இருபத்தையாயிரத்திற்கு (ஒராண்டுத் தொழில் வருமானம்) திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் ஒருவழக்கு தொடுத்தார்; முனிசீப்புக்கு அறிவிப்பு (Notice) அனுப்பிய பிறகே இந்த வழக்கு தொடுக்கப்பெற்றது. முனிசீப்புக்குக் கதிகலங்கியது. தாம் தவறாக இவருடன் மோதிக் கொண்டது பற்றி மிகவும் வருந்தியதாகக் கேள்வி. அரசியல் கலப்பு அதிகம் இல்லாத காலத்தில் இந்நிகழ்ச்சி நடை பெற்றது. இன்றைய நிலையில் நிர்வாகத்தில், நீதிவழங்கு வதில் அரசியல் தாண்டவமாடுகின்ற நிலையில் நீதித்துறை யிலும் நிர்வாகத்துறையிலும் என்னென்ன நடைபெறு கின்றனவோ? இவற்றையெல்லாம் கண்மூடி மெளனியாகிக் கவனித்துக் கொண்டிருக்கும் இறைவனது குறுக்கீட்டால் தான் 'கதிமோட்சம் ஏற்படவேண்டும். திக்கற்றவர்கட்குத்

தெய்வம்தானே துணை?

பிராமண வழக்கறிஞர்களில் சிலர் முனிசிப்புtது கருணை கொண்டு 25 ஆயிரத்திற்குத் தொடுக்கப் பெற்ற வழக்கைத் திரும்பப் பெறுமாறு அரங்கசாமி ரெட்டியாரை வேண்டினர். சில மாதங்கள் கழித்து வழக்கைத் தொடராது திரும்பப் பெற்றார் அரங்கசாமி ரெட்டியார். முனிசிப்புக்கு இதில் கிடைத்த தண்டனை அவர் சம்பளத்தில் மூன்று ஆண்டுகட்கு படி ஏற்றம் (increment) இல்லை என்பது ஒரு பெரிய அதிகாரிக்கு இதுவே பெரிய தண்டனையாகும்.

இந்த முனிசீப்பு ஓர் அமீனாவுடன் தவறாக மோதி அவமானப்பட்டார். ஒவ்வொரு மாதத்திற்கும் முனிசிப்பு வீட்டுக்கு ஒர் அமீனா காவலாக இருப்பது வழக்கம்.கோடை விடுமுறையில் எல்லா முனிசீப்பும் அவரவர் ஊருக்குப்போய்