பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Í 55 நினைவுக் குமிழிகள்-2

சொன்னபடி நீதிபதி பதியவில்லை. ஆதலால் கையெழுத்துப் போடமாட்டேன்' என்று சொல்லி விட்டார். இப்படித் தவறாக வாக்குமூலத்தைப் பதிவு செய்தோ அல்லது முக்கிய

மானவற்றை நீக்கிப் பதிவு செய்தோ வாக்குமூலத்தைத் தயாரித்துவிட்டால் இதைக்கொண்டு தீர்ப்பைப் பாதகமாகச் சொல்லுவது எளிது. முனிசிப்பு தான் இவ்வாறு பல வழக்கு களைக் கெடுத்தால், கட்சிக்காரர்கள் அரங்கசாமி ரெட்டி பாரிடம் போகார்; அவர் தொழில் பாதிக்கப்படும் என்று திட்டமிட்டிருந்ததைக் கண்டு கொண்டதால் அரங்கசாமி ரெட்டியார் சாட்சி வாக்குமூலத்தில் கையெழுத்துப் போடா மலிருக்கத் திட்டமிட்டார்.

இந்த விஷயம்பற்றி மன்றத்தில் முனிசீப்பிற்கும் அரங்க சாமி ரெட்டியாருக்கும் பலத்த வாக்குவாதம் நடை பெற்றது. அரங்கசாமி ரெட்டியார் நீதிபதி வாக்குமூலத் தைச் சகியாகப் பதியாததைக் குறித்து வன்மையாக எதிர்த்துப் பேசினார். முனிசிப்பு சினங்கொண்டார்; மதியை இழந்தார். அரங்கசாமி ரெட்டியாரை 'வெளியே நட’’ (Get out) என்று கூறிவிட்டார். முனிசிப்பு இவ்வாறு பொது மனிதரிடம் நடந்து கொண்டது தவறு; பெருந்தவறு. அன்று மாலையே வக்கீல் சங்கம் (Bar Association) கூடி முனிசீப் பின் அடாத செயலைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றி மாவட்டச் சங்கத்திற்கு அனுப்பியது. மாவட்டச் சங்கமும் கூடி இத்தீர்மானத்தை நிறைவேற்றி உயர்நீதிமன்ற வக்கீல் சங்கத்திற்கு அனுப்பி வைத்தது. சென்னை சங்கமும் முனிசிப்பின் அடாத செயலை வன்மையாகக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றி உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு அனுப்பியது; முன்சீப்பிற்குத் தண்டனை வழங் கவும் பரிந்துரைத்தது. இதில் விரைவான முடிவு ஏற்பட வில்லை. பிராமணர்கள் ஒன்று திரண்டு முனிசீபபைக் காப்பாற்ற நினைத்தனர். . . . . . .