பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வக்கீல் அரங்கசாமி ரெட்டியார் 155

வருவாய் இருந்தது. வருமானவரி கட்டத் தொடங்கினார். துறையூரில் வழக்கறிஞர்களில் யாரும் அதுகாறும் வருமான வரி கட்டியதில்லை, அரங்கசாமி ரெட்டியார் கட்டியவுடன் எல்லா வழக்கறிஞர்கட்கும் வருமானத்துறையினர் வரவுசெலவு கணக்குத் தருமாறு அறிக்கை (Notice) அனுப்பினர். இஃது எல்லோருக்கும் சிறிது தலைவலியைத் தந்தது. உள்ளுக்குள் மனம் குமுறினர். அரங்கசாமி ரெட்டியார் வரு மானவரி கட்டியதால் ஏற்பட்ட விளைவுதான் இது என்ற முடிவுக்கும் வந்தனர், ஒருசிலர் வெளிப்படையாகவே, "எதற்கு இத்தலைவலியை வருவித்துக் கொண்டிர்கள்?’ என்று கேட்டனராம். அதற்கு இவர், எதிர்பாராமல் நெஞ்சுவலி வருவதைத் தடுக்கும் பொருட்டுதான் என்று மறுமொழி தந்ததாக ஒரு சமயம் என்னிடம் சொன்னதாக நினைவு.

தொழிலில் நல்ல பேர், நல்ல வருமானம் வருவதைக் கேள்வியுற்றார் மாவட்ட முனிசீப்பு ஒருவர் (1950-51). இவர் பிராமணர். போர்த்துறையிவிருந்து வந்தவர். இராமாநுசம் என்ற பெயரையுடையவர் என்பதாக நினைவு. அரங்கசாமி ரெட்டியாரைப் பிராமணவிரோதி' என்று தவறாகக் கருதிக் கொண்டு இவர் வாதிக்கும் வழக்குகளைக் கெடுக்கத் திட்ட மிட்டார். அந்தக் காலத்தில் சாட்சிகளின் விசாரணை தமிழில்தான் நடைபெறும். ஆனால் நீதிபதி சாட்சிகள் சொல்லும் வாக்குமூலத்தை ஆங்கிலத்தில்தான் பதிவு செய்வது வழக்கத்தில் இருந்து வந்தது. ஆனால் தலைமை எழுத்தர் வாக்குமூலம் ஆங்கிலத்திருப்பதைத் தமிழில் மொழி பெயர்த்துச் சொல்லி அது சரியாக இருந்தது என்ப தாக எழுதிச் சாட்சியிடம் கையெழுத்து வாங்குவது வழக்கம் இப்படிச் செய்தால்தான் வாக்குமூலம் செல்லும். ஒரு சாட்சி யின் வாக்குமூலத்தைச் சரியாக எழுதவில்லை என்பதைக் கண்டு கொண்டார் ரெட்டியார். சாட்சியிடம் கையெழுத்துப் போடாதே" என்று சொல்லிவிட்டார். சாட்சியும் "நான்