பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 நினைவுக் குமிழிகள்-2

துறையூரில் 17 வழக்கறிஞர்களில் M.R. இராசகோபால் பிள்ளை, P. அரங்கசாமி ரெட்டியார், P. M, வேங்கடாசல துரை இவர்களைத் தவிர எல்லோரும் பிராமணர்கள். நான் சாதிக்கு அப்பாற்பட்டவன் என்பதை அக்காலத்தாரும் இக் காலத்தாரும் நன்கு அறிவார்கள். எங்கள் குல வைணவப் பெரியார் பெ. இராமாதுச ரெட்டியார்,

தன்னிலைமை தானறியாத் தன்மை யாளன்

சாதிவெறி சமயவெறி சற்று மில்லான் துன்னியநல் சைவகுலத் தோன்ற லேனும்

தூயதிருக் கச்சிநகர் அண்ணங் கரராம் மன்னியவா சாரியரின் மலர்த்தாள் போற்றி

வைணவத்தின் வளமனைத்தும் உணரப்பெற்றோன்'

என்று கூறியிருப்பதே இதற்குச் சான்றாக அமையும். அரங்.ே சாமி ரெட்டியாரும் இந்தகையவரே. நாங்கள் எல்லோ ரிடமும் நன்கு மனம் விட்டுப் பழகுவோம். வெளிப்படை யாகத் தெரியாவிடினும் உள்ளுக்குள் பிராமணர்களில் பலர் எங்கள் மீது வெறுப்புக் கொண்டிருந்தனர் என்பது பல நிகழ்ச்சிகளால் தெளிவாகும். ஆயினும், எங்கள் இரு வருக்கும் பிராமன நண்பர்கள் உண்டு. அதிலும் பிராமணர் களில் வைணவர்கள்தான் நான் மாணாக்கனாக இருந்தது முதல் இன்றுவரை நெருக்கமானவர்களாக இருந்து வருகின்றனர். என்மக்கள் இருவருக்கும் வைணவ நண்பர்கள் தாம் உள்ளனர். உலகளந்தான் திருவடிச்சார்பு அன்றும் இன்றும் இருந்து வருவதே இதற்குக் காரணமாகுமோ?

அரங்கசாமி ரெட்டியார் தொழில் தொடங்கிய ஒல ஆண்டுகளிலேயே கணிசமான அளவுக்குத் தொழிலில்

1. டாக்டர் ந. சுப்புரெட்டியார் மணி லர்

பக். 25. H டியார் மணிவிழாமலர் (1977)