பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வக்கீல் அரங்கசாமி ரெட்டியார் I59

திட்டம். இங்ங்னம் எதிர்க்கட்சியின் சாட்சியை இரகசியமாகக் கொண்டு வந்து நிறுத்தியது தம் கட்சிக் காரர். 'பார்த்தாயா சுப்பு? இப்படித்தான் நீதிமன்றத்தில் வழக்குகள் நடைபெறுகின்றன என்றார். சாட்சி சொல்லு வதையே தொழிலாகக் கொண்டு பல சாட்சிகள் ஒவ்வொரு நீதிமன்றத்திலும் உள்ளனர். ஒரு சமயம் என் பள்ளிக்கு உள்ளுர் மாவட்ட நீதிபதி (District Munsit) ஒர் இலக்கியக் கூட்டத்திற்குத் தலைமை வகிக்க வந்திருந்தபோது இத்தகைய சாட்சிகளைப் பற்றிக் குறிப்பிட்டது நினைவிற்கு வந்தது. குறுக்கு விசாரணையில் உண்மையை வாங்க முடியாத சாட்சிகளும் உள்ளனர். இதிலிருந்து சாட்சிக் காரன் காவில் விழுவதைவிட, சண்டைக்காரன் காலில் விழுவது மேல்.’’ என்ற உலக வசனத்தின் பொருள் எனக்குத் தெளிவாகப் புலனாயிற்று. இருவரும் நீதிமன்றத் திற்கு வெளியே உடன்பாடு செய்துகொள்வதே சிறந்தது என்பதும் தெளிவாயிற்று. எல்லாவித வழக்குகட்கும் இந்தப் படிப்பினை பொருந்தாது. இயன்றவரை நீதிமன்றத்திற்குப் போகாதிருப்பது மேல் என்ற படிப்பினையைப் பின்பற்ற வேண்டும் என்பதுதான் நான் கண்ட உண்மை. நடை முறையில் இது சாத்தியப்படுவதில்லை.

சுவையான வழக்கு : துறையூருக்கு அருகிலுள்ள உப்பிலிய புரத்தில் இராமசாமி ரெட்டியார் என்ற ஒருவர் இருந்தார். இவரைப் பொதுவாக மக்கள் குறிப்பிடும் போது குரங்கு ரெட்டி’ என்றுதான் சொல்லுவார்கள். இஃது அவருக்கும் தெரியும். இவர் மாந்தோட்டம் வைத்திருந்தார். பல நல்ல `# ரக மாம்பழங்கள் இவர் தோட்டத்திலிருந்து சந்தைக்கு வரும். இந்தப் பழங்கள் காரணமாக இவர் புகழ்பெற்றிருந்தார். ஆனால் இவர் ஒரு சிடுமூஞ்சி'; எளிதில் கோபத்திற்கு உள்ளாவார். இதே ஊரில் குமரப்ப கவுண்டன் என்பவர் ஒருவர். இவரைக் கரடிக் கவுண்டன்’