பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 நினைவுக் குமிழிகள்-2

என்று பொதுமக்கள் குறிப்பிடுவது வழக்கம். இது கவுண்ட லுக்கும் தெரியும். இராமசாமி ரெட்டியாருக்கும் குமரப்பக் கவுண்டனுக்கும் அடிக்கடி தகராறு நேரிடும். இராமசாமி ரெட்டியார் தம்மைக் குமரப்பக் கவுண்டன் குரங்கு ரெட்டி' எனறு அடிக்கடி இழித்துக் கூறுவதால் தன் மானம் பறிபோவதாகக் கூறி ரூ 2000/- க்கு ‘மான நட்டம் கோரி துறையூர் மாவட்ட முனிசீப் மன்றத்தில் வழக்குத் தொடுத் தார். குமரப்ப கவுண்டனுக்கு வக்கீல் அரங்கசாமி ரெட்டி யார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

இராமசாமி ரெட்டியார் (குறுக்கு விசாரணையில்) கூறியது : "என் பெயர் இராமசாமி ரெட்டியார். சிலர் என்னை 'குரங்கு ரெட்டி என்றும் குறிப்பிடுவார்கள் என்பதாகக்கேள்வி. அவர்கள் யாவர் என்பதையும் தெரிந்து கொள்வேன். அவர்கள்மீது யான் வழக்குத் தொடுக்க வில்லை. ஆளை அடையாளம் தெரிந்து கொள்வதாகக் குறிப்பிட்டிருப்பார்கள் என்று சும்மா இருந்துவிட்டேன்.”

குமரப்பக்கவுண்டன் (முதல் விசாரணையில்) : என் பெயர் குமரப்பக் கவுண்டன். என்னைக் கரடிக் கவுண்டன் என்றும் சிலர் அழைப்பார்கள். இதனால் எனக்குக் கோபம் வருவதில்லை. கோபம் கொள்வதற்கு இதில் என்ன இருக் கின்றது? அடையாளம் நன்கு தெரிவதற்கு என்னை அப்படி வழங்குகின்றனர் என்று நினைத்துக் கொள்வேன். இராம சாமி ரெட்டியாரையும் மனத்தில் எந்தவிதக் கெட்ட எண்ணமும் இன்றி குரங்கு ரெட்டியார் என்று குறிப்பிட் டிருப்பேன். இதில் தவறு இருப்பதாக எனக்குத் தெரிய வில்லை.”

இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி 'வழக்கில் ஒன்றும் இல்லை' என்று கூறித் தள்ளுபடி செய்தார். இது மிகவும் சுவையான வழக்கு என்பதால் சண்டுக் குறிப் பிட்டேன்.