பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I fo நினைவுக் குமிழிகள் - 2

பொழிவு மண்டபமாக்கப் பெறும். ஆண்டு விழாவைத் தவிர அடிக்கடி நடைபெறும் சிறப்புச் சொற்பொழிவுக் கூட்டங்கள் இங்குத்தான் வழக்கமாக நடைபெற்று வந்தன.

நாளடைவில் மாணாக்கர் தொகை பெருகிக் கொண்டே வந்தமையால் அடுத்த ஆண்டே இக்கட்டடத்திற்கு அருகிலேயே தென்புறம் சுமார் 150 அடிக்கு அப்பால் மீண்டும் ஒரு நீண்ட ஒட்டுவில்லைக் கட்டடம் எழுப்பப் பெற்றது. இதிலும் மூன்று வகுப்புக்கட் கென்று வசதிகள் செய்யப் பெற்றன. இந்த இரண்டு கட்டடங்கள் நிறுவப் பெற்றபிறகு ஒன்று, இரண்டு, மூன்று கீழ்ப்படிவ வகுப்புகள் இத்தக்கட்டடங்கட்கு மாற்றப் பெற்றன. இக்கட்டடங்கள், வகுப்புகள் மேற்பார்வைப் பொறுப்பு திரு T. S. இராமய்யா அவர்களிடம் விடப் பெற்றது. இப்பொறுப்பை அவர் திறம் பட நடத்தி வந்ததை இன்றும் தினைவு கூர்கிறேன். இடை இடையே ஓய்வு கிடைக்கும்போது நானும் இங்கு அடிக்கடி வந்து போவதுண்டு,

மேல் கீழ் வகுப்புகள் இரண்டு இடங்களில் இருக்கும் போது நடைமுறைத் தொல்லைகள் அதிகமாக இருந்தன. எழுத்தர் அலுவலகம் பழைய கட்டடத்திலேயே இருந்தமை யால் மாணாக்கர்கள் கட்டணங்களைச் செலுத்துவதில் மிகச் சிரமப்பட்டனர். இதனால் இரண்டாவதாக நியமிக்கப் பெற்ற எழுத்தர் முற்பகலில் நாடோறும் புதிய கட்டடங் கட்கு வந்த வசூல் செய்ய ஏற்பாடு செய்யப் பெற்றது. இதனால் சிரமம் சற்றுக் குறைந்தது. உடனுக்குடன் பற்றுச் சீட்டு கொடுப்பதில் சங்கடம் ஏற்பட்டது. வகுப்பு வாரியாகத் தனித்தாளில் எழுதி வசூல் செய்வார். பணத்தைச் சரி பார்த்து எடுத்துக் கொண்டு பழைய கட்டடங்கட்கு வந்து பற்றுச் சீட்டுகள் (வகுப்புவாரியாகப்) போட்டு பிற்பகலில் ஆன் மூலமாக அனுப்பி வைப்பார், இந்த ஏற்.ாட்டில்